தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனியா வேடத்தில் பிரியாமணி: போலீஸ் விசாரணை

Go down

சோனியா வேடத்தில் பிரியாமணி: போலீஸ் விசாரணை Empty சோனியா வேடத்தில் பிரியாமணி: போலீஸ் விசாரணை

Post  ishwarya Sat Mar 16, 2013 1:22 pm

நடிகை பிரியாமணி தெலுங்கில் தயாராகி வரும் 'சாண்டி' படத்தில் சோனியாகாந்தி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், சோனியாவை அவமதிக்கும் காட்சிகள் உள்ளனவா என்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

'சாண்டி' படத்தின் துவக்க விழா ஐதராபாத்தில் நடந்தபோது சோனியாகாந்தி போல் மேக்கப் போட்டு பிரியாமணி பங்கேற்றார். உடை, நடை, பாவனைகள் சோனியா போலவே இருந்தன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் பறந்தது. டெல்லி உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 'சாண்டி' படத்தின் இயக்குனர் சமுத்திராவிடம் விசாரணை நடத்தினர். சோனியா பற்றிய கதையா என கேட்டனர். படத்தின் திரைக்கதை முழுவதையும் கேட்டு வாங்கினர். இதுகுறித்து பிரியாமணியிடம் கேட்டபோது படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கிறேன். ஆனால் முழு கதையும் எனக்கு தெரியாது என்றார்.

இயக்குனர் சமுத்திரா கூறும்போது, சாண்டி படம் அரசியல் கதைதான். ஆனால் தனிப்பட்ட அரசியல்வாதிகள் யாரையும் குறிப்பிடவில்லை. ஆந்திராவில் அரசியல் தலைவர் ஒருவர் எதிரிகளால் கொல்லப்படுகிறார். கல்லூரியில் படிக்கும் அவரது தங்கை கட்சிக்கு தலைவியாகி நாட்டை எப்படி கைப்பற்றுகிறார் என்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum