தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷால், குமரிமுத்துக்கு மீண்டும் நோட்டீஸ்: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு

Go down

விஷால், குமரிமுத்துக்கு மீண்டும் நோட்டீஸ்: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு Empty விஷால், குமரிமுத்துக்கு மீண்டும் நோட்டீஸ்: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு

Post  ishwarya Sat Mar 16, 2013 1:07 pm


நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் நடிகர்கள் விஷால், குமரிமுத்து பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

“விஸ்வரூபம்” படம் ரிலீசாக தடங்கள் ஏற்பட்ட போது நடிகர் சங்கம் கமலுக்கு உதவவில்லை என்று விஷால் விமர்சித்து இருந்தார்.

இதற்கு நடிகர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

இதற்கு விஷால் பதில் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் தனது மனதில் பட்டதை சொன்னதாகவும் என்னை புண்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். சமர் பட சம்பள பாக்கியை நடிகர் சங்கம் தனக்கு வாங்கித் தரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடிதம் செயற் குழு உறுப்பினர்களிடம் சமர்பிக்கப்பட்டது. விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசினார்கள். இறுதியில் விஷாலிடம் விளக்கம் கேட்டு இன்னொரு நோட்டீஸ் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

நடிகர் சங்க நிர்வாகிகளை அவமதித்து கருத்து வெளியிட்டதாக நடிகர் குமரிமுத்துக்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பபப்பட்டு இருந்தது. செயற்குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் குமரிமுத்து செயற்குழுவுக்கு வரவில்லை. தனக்கு வேறு பணிகள் இருப்பதால் வர இயலவில்லை என்று கடிதம் அனுப்பி இருந்தார்.

எனவே அடுத்த செயற்குழுவில் ஆஜராகும்படி குமரிமுத்துவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘நோட்டீஸ் எப்படி அனுப்பலாம்?’ : நடிகர் சங்கம் மீது விஷால் மீண்டும் தாக்கு
» நடிகர் சங்கத்தை அவமதித்ததாக புகார்: நடிகர் குமரிமுத்துக்கு நோட்டீஸ்
» நடிகர் சங்க வளாகத்தில் தியேட்டர்கள் கட்டுவதை எதிர்த்து வழக்கு: பதில் அளிக்க சங்கத்திற்கு நோட்டீஸ்
» நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது: விஷால், குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
» சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிபெறும்: நடிகர் விஷால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum