தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’

Go down

டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’ Empty டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’

Post  ishwarya Sat Mar 16, 2013 11:32 am


இந்து மக்கள் கட்சி மாநில அலுவலக செயலாளர் குமரவேல் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சினிமா டைரக்டர் அமீர் அளித்த ஒரு பேட்டியில் தலிபான்கள் என்ற ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ‘போராளிகள்’ என்று கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த தலிபான்களை இப்படி கூறுவது தமிழக இளைஞர்களை அவர்களது அமைப்பில் சேருவதற்கு பிரசாரம் செய்வது போல் உள்ளது. கோவை குண்டு வெடிப்பால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

விஸ்வரூபம் படம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் டைரக்டர் அமீர் பேட்டி அமைந்து உள்ளது.

அவருக்கும், தலிபான்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி போலீசார் கண்காணிக்க வேண்டும் வெளிநாடு சுற்றுப் பயணத்தின் போது அவர் தலிபான்கள் யாரை யாவது சந்தித்தாரா? என்று விசாரிக்க வேண்டும். அமீர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து முன்னணி மாநில தலைராக இருந்து படுகொலை செய்யப்பட்ட ராஜகோபால் கொலையில் அமீருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தி தேசவிரோத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

இவ்வாறு மனுவில் குமரவேல் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’
» திரைப்பட தணிக்கை குழுவை மாபியா கும்பல் என்று கூறுவதா?: டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்
» போட்டோகிராபர்கள் மீது போலீசில் திவ்யா புகார்.
»  எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
» நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum