தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடி அசையும் ஆண்டாள் தேர்

Go down

ஆடி அசையும் ஆண்டாள் தேர் Empty ஆடி அசையும் ஆண்டாள் தேர்

Post  gandhimathi Thu Jan 17, 2013 2:54 pm




தமிழக அரசின் சின்னமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம். இது பலருக்கு தெரியும். அதேபோன்று தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தேர் இந்த கோவிலில் உள்ள தேர் ஆகும். இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நான்குநேரி மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் உபயமாக வழங்கப்பட்டது.

தேர் முழுவதும் தேக்கு, கோங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால் இன்றளவுக்கும் உறுதியாக இருக்கிறது. இந்த தேரின் சிறப்பு என்னவென்றால் ராமாயண, மகாபாரத வரலாறுகளை குறிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் அதில் வடிக்கப்பட்டு உள்ளன.

சுமார் 1500 டன் எடையும், 112 அடி உயரமும் கொண்ட இந்த தேரின் சக்கரம் முன்பு மரத்தால் செய்யப்பட்டு இருந்தது. இதனால் இதற்கு முன்பு தேரை நிலைக்கு கொண்டு வர பல மாதங்கள் ஆகும். திருச்சி பெல் நிறுவனம் சார்பாக 1986-ம் ஆண்டு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டது.

அதன் பிறகு 3 மணி நேரத்தில் தேர் நிலைக்கு கொண்டுவரப்படுகிறது. பல பெருமைகளை உடைய ஆண்டாள் கோவிலின் தேர் ஆடிப்பூர நாளான வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி அசைந்து வர தயாராகி வருகிறது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum