தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒருவர் மீது இருவர் சாய்ந்து முக்கோண காதல்கதை அல்ல

Go down

ஒருவர் மீது இருவர் சாய்ந்து முக்கோண காதல்கதை அல்ல  Empty ஒருவர் மீது இருவர் சாய்ந்து முக்கோண காதல்கதை அல்ல

Post  ishwarya Thu Mar 14, 2013 2:41 pm

சென்னை : ஏட்ரியா டெக் பிலிம்ஸ் சார்பில் என்.கே.நாராயண ராஜு தயாரிக்கும் படம், ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’. லகுபரன், சுவாதி, சானியா தாராவுடன், கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை இயக்கும் பாலசேகரன் கூறியதாவது: தலைப்பை பார்த்து விட்டு சிலர் இது முக்கோண காதல் கதையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்கள். காதலில் மூன்று வகை உள்ளது. ஒரு தலைக் காதல், இருதலைக் காதல், தறுதலைக் காதல். இந்த மூன்றையும் ஒரு இளைஞன் கடந்து செல்வது மாதிரியான கதை. அதற்குத்தான் ஸ்வாதி, சானியா என்ற இரு ஹீரோயின்கள்.

சிங்கம்புலி, ராஜ்கபூர் இருவரும் காமெடியாக நடித்திருக்கிறார்கள். சீரியசான காதலை, சிரிப்பு கலந்து சொல்கிறோம். மிரட்டல் செல்வாவின் சண்டை காட்சிகள், நாகுவின் குத்துப்பாடல் என கமர்சியல் அம்சங்களும் உண்டு. இரண்டரை மணி நேரம் ரசிகர்களை ஜாலியாக உட்கார வைத்து அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு படத்தை உருவாக்கி உள்ளோம். இவ்வாறு பாலசேகரன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum