தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராணி வேடத்தில் நடிக்க வாள் சண்டை பயிற்சி : அனுஷ்கா பேட்டி

Go down

 ராணி வேடத்தில் நடிக்க வாள் சண்டை பயிற்சி : அனுஷ்கா பேட்டி  Empty ராணி வேடத்தில் நடிக்க வாள் சண்டை பயிற்சி : அனுஷ்கா பேட்டி

Post  ishwarya Thu Mar 14, 2013 2:40 pm



ராணி வேடத்தில் நடிக்க வாள் மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சி பெறுவதாக கூறினார் அனுஷ்கா. இது பற்றி அவர் கூறியதாவது: தெலுங்கு படங்களை மறந்துவிட்டு தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்களா என்கிறார்கள். அதில் உண்மை இல்லை. கடந்த 2 வருடத்தில் நான் ஒப்புக்கொண்ட எல்லா தெலுங்கு படங்களையும் முடித்துவிட்டேன். அதன் ரிலீஸ் தாமதமானது. இப்படங்களின் பணிகள் முடியட்டும் என்பதற்காக புதிய தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன்.

இப்போது குணசேகர் இயக்கும் ‘ருத்ரம்மா தேவி படத்தில் நடிக்கிறேன். இந்த வரலாற்று படத்துக்காக இயக்குனர் நிறைய ஆராய்ச்சி செய்து தகவல் திரட்டி இருக்கிறார். இதில் நடிப்பதற்காக கத்தி சண்டை மற்றும் குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகளை நான் பெற வேண்டி இருக்கிறது. அதற்காக மாதக்கணக்கில் பயிற்சி பெற உள்ளேன். வரும் ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. ‘ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிப்பது ஏன் என்கிறார்கள்? என்னை தேடி அதுபோன்ற வாய்ப்பு வருகிறது அதனால் ஒப்புக்கொள்கிறேன்.

ஒவ்வொரு வேடமும் வெவ்வேறானவை. இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. எனக்கு அதில் ஆர்வமில்லை. தமிழ், தெலுங்கிலேயே நிறைய படங்கள் வருகிறது. பாலிவுட் படங்களுக்கு ஒதுக்க என்னிடம் கால்ஷீட் இல்லை. தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் ‘இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், ஹரி இயக்கும் ‘சிங்கம் 2வில் சூர்யாவுடனும் நடிக்கிறேன். இதுதவிர தெலுங்கில் 2 படங்களில் நடிக்கிறேன். வரும் ஆண்டு முழுவதும் இப்படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராணி வேடத்தில் நடிக்க வாள் சண்டை கற்கும் நடிகை அனுஷ்கா
» ராணி வேடத்தில் நடிக்க வாள் சண்டை கற்கும் நடிகை அனுஷ்கா
» ராணி வேடத்தில் நடிக்க வாள் சண்டை கற்கும் நடிகை அனுஷ்கா.
» தமிழ்,தெலுங்கில் தயாராகும் சரித்திர படத்தில் நடிகை அனுஷ்கா: ராணி ருத்ரமாதேவி வேடத்தில் நடிக்கிறார்
» டெல்லி மாணவி வேடத்தில் நடிக்க தயார் : லட்சுமிராய் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum