தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு காட்பாதர் கிடையாது : ஊர்மிளா

Go down

எனக்கு காட்பாதர் கிடையாது : ஊர்மிளா                     Empty எனக்கு காட்பாதர் கிடையாது : ஊர்மிளா

Post  ishwarya Thu Mar 14, 2013 1:57 pm

சென்னை: ராம் கோபால் வர்மாவை காட்பாதர் என்று வர்ணித்த ஊர்மிளா சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘எனக்கு காட்பாதர் யாருமில்லை’ என்றார். தமிழில் ‘இந்தியன்’, இந்தியில் ‘ரங்கீலா’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஊர்மிளா. இவர் ராம் கோபால் வர்மா படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அப்போது தனது காட்பாதர் வர்மாதான் என்றார். சமீபகாலமாக நடிப்பைவிட்டு ஒதுங்கி இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் தனக்கு யாரும் காட்பாதர் இல்லை என்று காட்டமாக கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது,‘திரையுலகுக்கு வரவேண்டும் என்று எண்ணும் இளம்பெண்களுக்கு நான்ஒரு உதாரணமாக இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் படவுலகில் எனக்கு காட் பாதர், காட் மதர் என்று யாரும் கிடையாது. எனது குடும்பத்திலும் யாரும் திரையுலகில் இல்லை. என்னுடைய திறமையை மட்டுமே நம்பினேன். ரசிகர்கள்தான் என் மனதில் நம்பிக்கை வளர்த்தார்கள். பாலிவுட்டை பொறுத்தவரை என்னுடைய காட் பாதர் என்றால் அது ரசிகர்கள்தான். அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை. சமீப காலமாக சினிமாவில் உங்கள் நடனத்தை பார்க்க முடியவில்லையே என்கிறார்கள். அப்படி இல்லை. என் வாழ்வில் சிறந்த தருணம் என்றால் படவுலகில் பணியாற்றிய நாட்கள்தான். ஆனால் சினிமாவையும் தாண்டி இன்னொரு வாழ்க்கை இருக்கிறது. அதைத்தான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு மேனேஜர் என்று யாரையும் வைத்துக் கொண்டதில்லை. இடைப்பட்ட காலத்தில் வெளிநாடு பயணம், புத்தகம் படிப்பது என்றும் சல்சா நடனம் கற்றதுடன் ஸ்பானிஷ் மொழி கற்றேன்’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum