தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலவரங்களின் பாதிப்பு படமாக உருவாகிறது

Go down

    கலவரங்களின் பாதிப்பு படமாக உருவாகிறது  Empty கலவரங்களின் பாதிப்பு படமாக உருவாகிறது

Post  ishwarya Wed Mar 13, 2013 5:55 pm

கலவரங்களின் பாதிப்பு, படமாக உருவாகிறது. ‘உளவுத்துறை, ‘ஜனனம் படங்களை இயக்கிய டி.எஸ்.ரமேஷ் செல்வன் இயக்கும் படம் ‘கலவரம். இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரு தனிமனிதனையோ, சமுதாயத்தையோ வீழ்ச்சியின் எல்லைக்கு கொண்டு செல்லும் திட்டமிட்ட சதியே கலவரம். ஒரு உண்மை சம்பவத்தின் பாதிப்புகளை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் நெறிகளின் ரூபங்களை சினிமாவாக்கும் முயற்சியே இத்திரைப்படம். கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையை கண்முன்நிறுத்தும்.

இதன் திரைக்கதை ஒரு உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலைமுதல் பின் அச்சம்பவ களத்தின் உண்மை முகங்களை வெளிப்படுத்தி காட்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார். அஜெய், ராஜ்கபூர், சுஜிபாலா, மயில்சாமி, இன்பநிலா, லாவண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பி.சந்திரன். இசை எப்.எஸ்.பைசல். தயாரிப்பு டி.ஆர்.ரவிசந்திரன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum