தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காத‌ல், க‌‌‌ற்ப‌ழி‌ப்பு, ‌பண‌ம் ப‌றி‌ப்பு – ரவுடி‌யி‌ன் காம களியாட்ட‌ம்!

Go down

காத‌ல், க‌‌‌ற்ப‌ழி‌ப்பு, ‌பண‌ம் ப‌றி‌ப்பு – ரவுடி‌யி‌ன் காம களியாட்ட‌ம்! Empty காத‌ல், க‌‌‌ற்ப‌ழி‌ப்பு, ‌பண‌ம் ப‌றி‌ப்பு – ரவுடி‌யி‌ன் காம களியாட்ட‌ம்!

Post  meenu Wed Mar 13, 2013 5:27 pm


0


க‌‌‌ற்ப‌ழி‌ப்பு, கொலை, ‌மிர‌ட்‌ட‌ல் உ‌ள்‌ளி‌ட்ட வழ‌க்‌குக‌ளி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌பிரபர ரவுடி ‌சிறை‌யி‌ல் இரு‌ந்து கொ‌ண்டே, இளம் பெண்களை கடத்தி கற்பழித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறி‌த்து‌ள்ள ச‌ம்பவ‌ர் கோவை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

கோவை ர‌த்‌தினாபு‌ரியை சே‌ர்‌ந்த பிரபல ரவுடியான ஜிம் ஹக்கீ‌மி‌ன் மு‌க்‌கிய தொ‌ழி‌ல் மிரட்டல், ஆபாச வீடியோ எடுத்தல், பின்னர் அவற்றை காட்டி பணம் பறித்தல் ஆகியவைதான்.

தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் காதல் ஜோடிகளை ஹ‌க்‌கீமு‌ம், கூட்டாளிகளும் நோட்டமி‌ட்டு, காதலனை தாக்கிவிட்டு காதலியை கடத்தி செல்வா‌ர்கலா‌ம். பின்பு அவரை ஒரு இடத்தில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்வதுடன், அதை மறைந்து இருந்து வீடியோ எடுத்து, அந்த வீடியோவை காட்டி பணம் பறிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தான்.

அவன் மீது ஆபாச படம் எடுத்து மிரட்டுவது தொடர்பாக 2 வழக்கும், கொலை மிரட்டல் விடுத்ததாக 3 வழக்கும் ரேஸ்கோர்ஸ் போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த ஒரு பெண்ணை கடத்திச்சென்று அவருடைய வாழ்க்கையை சீரழித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், அவன் மீது கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எத்தனை வழக்கு அவன் மீது போட்டாலும் கைதாகி சிறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்த உடனே தனது வேலையை தொடங்கி விடுவான்.

தனக்கு நெருங்கிய நண்பர்களை வைத்து பணக்கார மாணவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வான். பின்னர் அவர்களிடம் நைசாக பேசி ஓட்டலுக்கு வரவழைப்பான். அவர்கள் அங்கு வந்ததும், ஏற்கனவே தயாராக இருக்கும் அழகிகள், அந்த மாணவர்களிடம் நைசாக பேசி அவர்களை மயக்குவார்கள். அதை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து, அதை அந்த மாணவர்களிடம் காட்டி மிரட்டி பணம் பறித்து உள்ளான்.

இது தொடர்பாக எந்த மாணவர்களும் புகார் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்ற நோக்கத்தில் அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு அதில் இருந்து மாணவர்கள் தப்பித்து உள்ளனர். இவ்வாறு பல மாணவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளான். இதே போல பல இளம் பெண்களின் ஆபாச படங்களும் சிக்கி உள்ளது.

இந்த பெண்கள் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து உள்ளனர்.இந்த வீடியோக்கள் தற்போது கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் யார்? என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து ஜிம் ஹக்கீம் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாமா? என்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக காவ‌ல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ‌‌பிரபல ரவுடி ஹக்கீம் (33) 3 முறை குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார். த‌ற்போது கோவை ராமநாதபுரத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கிலும், கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்கிலும் கைதாகி தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு‌ள்ளா‌ர்.

சிறைக்கு வெளியே இருந்தபோது காத‌லி‌க்கு‌ம் இள‌ம் பெ‌ண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து அவ‌ற்றை ‌வீடியோ எடு‌த்து சி.டி.க்கள் வெ‌ளி‌யி‌ட்டு பண‌ம் ப‌றி‌த்த ‌சி.டி.‌க்க‌ள் போது கோவை போலீ‌சிட‌ம் சிக்கியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum