தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஷா என்னை மிரள வைத்தார்

Go down

இஷா என்னை மிரள வைத்தார்                    Empty இஷா என்னை மிரள வைத்தார்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:24 pm

சென்னை : விக்ரம், ஜீவா, லாரா தத்தா, தபு, நாசர், இஷா ஷெர்வானி நடிப்பில் தமிழ், இந்தியில் தயாராகும் படம், ‘டேவிட்’. பிஜோய் நம்பியார் எழுதி, இயக்குகிறார். அனிரூத், பிரசாந்த் பிள்ளை உட்பட 6 பேர் இசையமைக்கின்றனர். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் விக்ரம் பேசியதாவது:
இதில் நான் மீனவனாகவும், ஜீவா இசைக் கலைஞனாகவும் நடிக்கிறோம். மங்களூரில் ஷூட்டிங் நடந்தபோது,

எனக்கு அருகில் ஒரு பெண் வந்தார். நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவரும் செய்தார். தன் காலை கழுத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டார். அவரை அசத்தலாம் என்று ஜிம்மில் ஏகப்பட்ட வெயிட்டைத் தூக்கிய நான், அவரது செயலைப் பார்த்து ஷாக் ஆனேன். பிறகு, ‘நீ யார்?’ என்றேன். ‘நான் உங்ககூட நடிக்கப் போறேன்’ என்றார். பிறகுதான் அவர் இஷா ஷெர்வானி என்று தெரிந்தது.

அவரது அப்பா, அம்மாவுக்கு நடனத்தில் ஈடுபாடு இருந்ததால், அவர்களின் ஜீன் இஷாவுக்குள்ளும் இருந்ததில் வியப்பில்லை. இந்தப் படத்தில் மீனவனாக நடித்ததை மறக்க முடியாது. கடலில் சூழன்றடிக்கும் காற்றில் படகு செல்லும்போது, இஷாவுடன் நடித்த காட்சிகளை கஷ்டப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள். இதில் ஜீவாவுடன் இணைந்து நடித்ததும் சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வாறு விக்ரம் பேசினார். ஜீவா, இஷா ஷெர்வானி, அனிரூத், பாடகர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மிரள வைத்த ஜேம்ஸ்பாண்ட்
» பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» தமன்னாவை வெட்கப்பட வைத்தார் சிரஞ்சீவி...
» நயன்தாரா படம்!- கமல் துவக்கி வைத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum