தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தள்ளிப் போகும் விஸ்வரூபம்

Go down

     தள்ளிப் போகும் விஸ்வரூபம்  Empty தள்ளிப் போகும் விஸ்வரூபம்

Post  ishwarya Wed Mar 13, 2013 4:59 pm

ஜனவ‌ரி 11ஆம் தேதி வெளியாவதாக இருந்த விஸ்வரூபம் கமல் மற்றும் திரையரங்கு உ‌ரிமையாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜனவ‌ரி இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

DTH-ல் விஸ்வரூபத்தை வெளியிடும் கமலின் முடிவுக்கு எதிர்ப்பு தெ‌ரிவித்து திரையரங்கு உ‌ரிமையாளர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே விஸ்வரூபத்துக்கு திரையரங்குகள் கிடைத்தன. இதேநிலைதான் கேரளாவிலும், கர்நாடகாவிலும். ஆந்திராவில் விஸ்வரூபத்தை விநியோகிக்கும் பொறுப்பை தாச‌ரி நாராயணராவ் எடுத்துக் கொண்டதால் ஓரளவு திரையரங்குகள் கிடைத்துள்ளன. வடக்கே ஒரு திரையரங்குகூட விஸ்வரூபத்துக்கு ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்றிரவும், இன்று காலையும் திரையரங்கு உ‌ரிமையாளர்களுடன் கமல் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டதாகவும், ஜனவ‌ரி இறுதியில் அதிக திரையரங்குகளுடன் விஸ்வரூபம் பிரமாண்டமாக வெளியாகும் எனவும் தெ‌ரிவிக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும் பட வெளியீடு தள்ளிப் போவது பற்றியும், DTH-ல் படம் திரையிடுவது குறித்தும் அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் என ‌ரீஜென்ட் சாய் மீரா தொடர்ந்த வழக்கை விசா‌ரித்த நீதிபதிகள் படத்தை தடை செய்ய போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி தடை கோ‌ரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum