தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன்னிப்பு கேட்டார் பத்மப்பிரியா

Go down

மன்னிப்பு கேட்டார் பத்மப்பிரியா  Empty மன்னிப்பு கேட்டார் பத்மப்பிரியா

Post  ishwarya Wed Mar 13, 2013 1:11 pm

திருவனந்தபுரம் : மலையாள தயாரிப்பாளரிடம் பத்மப்பிரியா மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து கேரளாவில் அவர் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. நிஷாத் இயக்கி, தயாரித்த ‘நம்பர் 66 மதுர பஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் பத்மபிரியா. கடந்த இரு மாதங்களுக்கு முன் நிஷாத், தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தனது படத்தில் கதாநாயகியாக நடித்த பத்மப்பிரியா, பல நாட்கள் படப்பிடிப்புக்கு வராமலும், சில நாட்கள் தாமதாகவும் வந்தார். இதனால் தனக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பத்மபிரியாவின் மானேஜராக இருந்தவர் கூடுதலாக பணம் வாங்கினார்.

எனவே பத்மப்பிரியாவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் தற்காலிகத் தடை விதித்தது.
இந்நிலையில் பத்மப்பிரியா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டதாக மலையாள தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum