தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் நடிகை எம்.பானுமதி மரணம்

Go down

பழம்பெரும் நடிகை எம்.பானுமதி மரணம்  Empty பழம்பெரும் நடிகை எம்.பானுமதி மரணம்

Post  ishwarya Wed Mar 13, 2013 12:56 pm

சென்னை : பழம்பெரும் நடிகை எம்.பானுமதி நேற்று காலமானார். அவருக்கு வயது 67. ‘காதல் ஜோதி‘ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் எம்.பானுமதி. வியட்நாம் வீடு, ‘திருநீலகண்டர்’, ‘தில்லானா மோகனாம்பாள்‘, ‘கலாட்டா கல்யாணம்‘, ‘தெய்வமகன்’, ‘அவன் ஒரு சரித்திரம்’ உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

தேனாம்பேட்டை போயஸ் ரோட்டில் வசித்து வந்த அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் காலமானர். இறுதி சடங்குகள் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. பானுமதிக்கு வேங்கடலட்சுமி என்ற மகள் உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum