தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமிராய் நடித்த சண்டை காட்சியில் விபத்து

Go down

லட்சுமிராய் நடித்த சண்டை காட்சியில் விபத்து  Empty லட்சுமிராய் நடித்த சண்டை காட்சியில் விபத்து

Post  ishwarya Wed Mar 13, 2013 12:22 pm

சென்னை: லட்சுமிராய் நடித்த காமெடி சண்டை காட்சியில் சத்யன் காயம் அடைந்தார்.வினய், சத்யன், அரவிந்த், லட்சுமிராய் நடிக்கும் படம் ‘ஒன்பதுல குருÕ. பி.டி.செல்வகுமார் இயக்குகிறார். அவர் கூறியதாவது:லட்சுமிராயின் வைர நெக்லஸை திருடன் பறித்துக்கொண்டு ஓட அதை வினய், சத்யன் துரத்தி பிடிக்கும் சண்டை காட்சி சென்னையில் பிரதான சாலைகளில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியின்போது மோட்டார் சைக்கிள் ஒன்று சத்யன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கூட்டம் கூடியது. உடனடியாக அங்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைத்து பாதுகாப்பு அளித்தனர். அதன்பிறகு ஷூட்டிங் நடந்தது. இதன் ஷூட்டிங் முழுவதும் முடிந்த நிலையில் கூடுதல் பிளஸ்ஸாக ஒரு பாடல் சேர்க்க முடிவு செய்தோம். இந்த பாடலுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் நடனம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் சென்னை அடுத்துள்ள கார்டனில் இது படமாக்கப்பட்டது. செல்லத்துரை ஒளிப்பதிவு. கே இசை. எஸ்.சிவகுமார், ஆர்.சிவகுமார் தயாரிப்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum