தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேசியாவில் சும்மா நச்சுனு இருக்கு

Go down

மலேசியாவில் சும்மா நச்சுனு இருக்கு  Empty மலேசியாவில் சும்மா நச்சுனு இருக்கு

Post  ishwarya Tue Mar 12, 2013 2:24 pm

சென்னை : எஸ்தல் என்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.விமல் தயாரிக்கும் படம் ‘சும்மா நச்சுனு இருக்கு’. தமன், அர்ச்சனா, விபா, ஈரோடு மகேஷ், தம்பி ராமய்யா, பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சி.ஜே.ராஜ்குமார். இசை, அச்சு. இப்படம் குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது: இது நான் இயக்கும் 20வது படம். எனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இப்படமும் முழுநீள காமெடி படம்தான். இதில் இடம்பெறும் எல்லா கேரக்டருக்கும் தனித்தனி ஆசைகள் இருக்கும்.

அவர்கள் அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் மலேசியாவில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. ஒருவருடைய ஆசை மற்றொருவருடன் தொடர்புடையது. அது என்ன என்பது திரைக்கதை. மலேசியாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்குவதற்காக செல்வார்கள். நாங்கள் காமெடி காட்சிகளுக்காக செல்கிறோம். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. மலேசியன் டத்தோவாக நான் நடிக்கிறேன். எல்லா கேரக்டருக்கும் மையப்புள்ளியே நான்தான். அங்கு அரங்கேறும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். ஈரோடு மகேஷ் நகைச்சுவைப் பகுதிக்கான வசனம் எழுதியுள்ளார். 60 சதவீத படப்பிடிப்பு முடிந்தது. மற்ற காட்சிகளைப் படமாக்க மலேசியா செல்கிறோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum