தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுண்டாட்டம் திருப்புமுனை படம்: அருந்ததி நம்பிக்கை

Go down

சுண்டாட்டம் திருப்புமுனை படம்: அருந்ததி நம்பிக்கை  Empty சுண்டாட்டம் திருப்புமுனை படம்: அருந்ததி நம்பிக்கை

Post  ishwarya Tue Mar 12, 2013 12:32 pm

‘சுண்டாட்டம்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அருந்ததி கூறியதாவது: இந்தப் படத்தில் கலைவாணி என்ற கல்லூரிப் பெண்ணாக நடித்துள்ளேன். இது அற்புதமான கேரக்டர். எனக்கு ஜோடி இர்பான். அவரது தங்கை மிஷாவின் தோழியான நான், அடிக்கடி அவரது வீட்டுக்கு வரும்போது எங்களுக்குள் காதல் மலரும். அதை யதார்த்தமாகச் சொல்லியிருக்கின்றனர். இப்படத்துக்காக பஸ்சில் பயணிப்பது போலவும், என்னைப் பார்ப்பதற்காக இர்பான் ஓடி வருவது போலவும் ஒரு காட்சியை டைரக்டர் பிரம்மா ஜி. தேவ் படமாக்கினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் இர்பான் நடுரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த நானும் கண் கலங்கினேன். படம் பார்த்துவிட்டு, சும்மா நடிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். நிஜத்தில் எங்களைப் போன்ற நட்சத்திரங்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. 8ம் தேதி ரிலீசாகும் இப்படம் எனக்கு மட்டுமல்ல, படக் குழுவினருக்கும் திருப்புமுனையாக அமையும். தவிர ‘கூத்து’, ‘வெற்றி’, ‘சரவணப் பொய்கை’ படங்களிலும் நடிக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum