தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

Go down

கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு Empty கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

Post  meenu Mon Mar 11, 2013 2:18 pm

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னதாகவே, டிடிஎச் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொலைக்காட்சிச் சேனல்களில் காண்பிக்க செய்துவரும் ஏற்பாட்டினைத் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை என நம்மிடம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் இல்லங்களுக்குத் திரைப்படத்தைக் கொண்டு செல்வது ஒட்டுமொத்தமாகத் தொழிலினை அழித்துவிடும் என்றார் அவர்.

கமல்ஹாசனோ தனது முயற்சி, திரைத் தொழிலுக்குப் புதிய பரிமாணம் சேர்க்கும் என வாதிடுகிறார். இதுபோல செய்தால் திருட்டு விசிடி பிரச்சினையும் குறையும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அவரது வாதங்களை ஏற்பதாக இல்லை. கமலை ஆதரிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும் தாங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் எதுவுமில்லை என்றும் பன்னீர்செல்வம் கூறுகிறார்.

அடுத்தகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லவிருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “அரசு முடிவின்படி செயல்படுவோம்” – திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்
» முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க கமல் சார்! – திரையரங்க உரிமையாளர்கள்
» கமலை மட்டும் கொண்டாடி பரத்தை திண்டாட்டத்தில் விட்ட திரையரங்க உரிமையாளர்கள்..!
» ஒஸ்தி படத்தை நாங்கள் திரையிட மாட்டோம்! – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
» விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுக்கு மர்மவேடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum