தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம்"

Go down

விஸ்வரூபம் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம்" Empty விஸ்வரூபம் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம்"

Post  meenu Mon Mar 11, 2013 2:17 pm

தமிழ்திரைப்படத்துறையின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிகளுக்கு ஒளிப்பரப்பும் முடிவை எதிர்த்து அந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்பப்போவதாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.

தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் ஒளிப்பரப்பும் கமலஹாசனின் முடிவை தமிழ்நாட்டின் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கெனவே எதிர்த்து வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து இப்போது தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கமும் கமலஹாசனின் முயற்சியை எதிர்த்திருக்கிறது. கமலஹாசனின் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி. எச்.சில் ஒளிபரப்பும்போது, பட்டிதொட்டி எங்கும் வீடியோ ஸ்கோப் என்னும் அகன்ற திரையை பொருத்தி ஊர்மக்களை ஒன்று கூட்டி இந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிப்பரப்பப்போவதாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு அறிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த காயல் இளவரசு, கமலஹாசனின் இந்த முடிவு தமிழ்திரைப்படத்துறையை அழித்துவிடும் என்று அச்சம் தெரிவித்தார். அவரது செவ்வியின் முழுமையான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum