தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி

Go down

கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி Empty கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி

Post  meenu Mon Mar 11, 2013 12:29 pm

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அகமதாத் மொட்டேராவில் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் நான்கு போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 எனும் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 521 ஓட்டங்களை பெற்றது தனது வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் மீண்டும் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் இரண்டாவது ஆட்டத்தில் அந்த அணி 406 ஓட்டங்களை எடுத்தாலும், இந்திய அணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

இந்திய அணி 77 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை சுலபமாக எட்டியது.

நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் தேதேஸ்வர் புஜாரா இரட்டை சதம் அடித்தது ஆட்டமிழக்காமல் இருந்ததும், இங்கிலாந்து அணியின் தலைவர் அலிஸ்டர் குக் 176 ஓட்டங்களை இரண்டாவது ஆட்டத்தில் எடுத்ததும் சிறப்பம்சமாகும்.

அதே போல் இந்திய பந்து வீச்சாளர் பிரஞ்யான் ஓஜா இபோட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்ததும் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

இப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக சேதேஸ்வர் புஜாரா அறிவிக்கப்பட்டார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி, இம்மாதம் 23 ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

குறிப்பு: இந்தப் போட்டியின் போது புகைப்படக்காரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த கடும் நிபந்தனைகள் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பல செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்கள் அரங்கிலிருந்து வெறியேறினர். எனவே பல சர்வதேச அமைப்புகள் உட்பட பலருக்கு இப்போட்டியினை புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. ஆகவே இந்தச் செய்தியில் எமது தொகுப்பிலிருக்கும் பழையப் படங்களை பயன்படுத்தியுள்ளோம்.
இலங்கை வெற்றி

இலங்கை அணியின் ரசிகர் ஒருவர்( ஆவணப் படம்)

இதே போல காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி நியூசிலாந்து அணியை பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் மொத்தமாக பத்து விக்கெட்டுகளை எடுத்த ரங்கண ஹேரத் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நியூசிலாந்து அணி தமது இரண்டு ஆட்டங்களி முறையே 221 மற்றும் 118 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 247 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 93 ஓட்டங்களும் எடுத்தன.

இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன முதல் இன்னிங்ஸில் 91 ஓட்டங்களை எடுத்தது இலங்கை அணி வெற்றி பெற வழி வகுத்தது.

புதுமுக ஆட்டக்காரரான கருணாரட்ண தமது இரண்டாவது ஆட்டத்தில் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum