தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோயின்றி வாழ

Go down

நோயின்றி வாழ  Empty நோயின்றி வாழ

Post  oviya Sun Mar 10, 2013 9:53 am

பிறவி என்ற பெருங்கடலை நீந்தினால் தான் இறைவனடி சேர இயலும் என்று வள்ளுவர் கூறுகிறார். பிறவி என்ற பெருங்கடலை கடக்க வேண்டும் என்றால் நோயின்றி உயிர் வாழுதல் அவசியமாகிறது. சித்தர்கள் பதி என்ற இறைவனை பசு என்ற ஆன்மா அடைய வேண்டுமெனில், பாசம் என்ற உலக மாயையை துறக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். உலக மாயையை துறக்க நோயின்றி வாழ வேண்டும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நோயின்றி உயிர்வாழ உடலை நன்னிலையில் வைத்தல் மிகமுக்கியம் என்று சித்தமருத்துவம் கூறுகிறது.

சித்த மருத்துவம் உணவு, தூக்கம், குளியல், உடலுறவு, மற்றும் தினசரி பழக்க வழக்கங்கள் பற்றி சில விதிமுறைகள் தந்துள்ளது. இதன்படி நடந்தால் நோயின்றி வழலாம்.

நோயின்றி வாழ

செய்யகூடியவையாவன:

உணவை நன்கு பசித்த பின் உண்ணுங்கள். உணவு உண்ணும் போது ½ வயிறு உணவும், ¼ வயிறு நீரும், உண்டு ¼ வயிறு வெற்றிடம் இருக்குமாறு உண்ண வேண்டும்.
ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உணவு உண்ணுங்கள்.
தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் அருந்துங்கள்.
பசும்பாலை அதிக அளவு உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
மோரில் அதிக நீர் சேர்த்து உண்ணுங்கள்.
தயிரில் முந்தைய நாளில் ஊறவைத்த மூத்த தயிரை மட்டும் உண்ணுங்கள்.
வெண்ணையை உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
நெய்யை உருக்கிய பின்பே உண்ணுங்கள்.
கிழங்கு வகைகளில் கருணை கிழங்கை அதிக அளவு உண்ணுங்கள்.
உணவு உண்ட பின் குறுநடை கொள்ளல் அவசியம். அதாவது சிறுது தூராம் நடக்க வேண்டும்.
இரவில் மட்டும் தூங்குங்கள். பகலில் தூங்காதீர்கள்.
படுத்து தூங்கும்போது இடதுபுறம் கை வைத்து சாய்ந்து படுத்து தூங்குங்கள்.
எண்ணெய் தேய்த்து, நான்கு நாட்களுக்கு ஒருமுறை குளியுங்கள்.
கண்டிப்பாக வெந்நீரில் குளிக்க வேண்டும்.
பெண்களிடம் உடலுறவு மாதம் இருமுறையே செய்யுங்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாந்திக்கு மருந்து சாப்பிடுங்கள்.
பேதிக்கு நான்கு மதத்திற்கு ஒருமுறை மருந்து சாப்பிடுங்கள்.
கண்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அஞ்சனம் (கண்ணிலிடும் மருத்துவ மை) தீட்டுங்கள்.
1 ½ மாதத்திற்கு ஒருமுறை நசியம் (மூக்கிலிடும் மருந்து) செய்யுங்கள்.
பசுவையும், தெய்வத்தையும், பீதுர்களையும் வணக்கம் செய்யுங்கள்.

இவ்வாறு செய்தால் நீங்கள் கண்டிப்பாக நோயின்றி வாழ்வீர்கள்.

செய்யகூடாதவைகளாவன:

முந்தைய நாட்களில் சமைத்த உணவு, கறிகுழம்புகளை அமுது என்றாலும் உண்ணாதீர்கள்.
மூல நோய்களை உண்டாக்கும் காய்கறிகளை உண்ணாதீர்கள்.
தூக்கத்தை மாலை பொழுதில் தவிர்க்கவும்.
மலம் போதல் மாலை பொழுதில் தவிர்க்கவும்.
மலம் செல்லுதல், சிறுநீர் போதலை அடக்காதீர்கள்.
பகலில் தூங்காதீர்கள்.
வயதில் மூத்த பெண்களிடம் உடலுறவு கொள்ளதீர்கள்.
விலைமாதரிடம் தொடர்பு கொள்ளதீர்கள்.
பூனை, நாய், ஆடு போன்ற செல்ல பிராணிகளிடம் நெருங்கி பழகாதீர்கள்.
இளம் வெயிலில் நிற்காதீர்கள்.
ஆண்கள் விந்துவை அதிகம் விடாதீர்கள்.
பிறருடைய முடியில் உள்ள நீர் படும்படி நிற்காதீர்கள்.
அசுத்தம் உள்ள இடங்களை நெருங்காதீர்கள்.
மணம் நிறைந்த பூக்களை நடு இரவில் முகராதீர்கள்.

இவைகளை செய்யாமல் தவிர்த்தால் தாங்கள் நோயின்றி வாழலாம்.
உணவு:

ஆடு, மாடு இறைச்சியுடன் உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், முளைக்கட்டி உலர்த்தி உடைத்த பருப்பு வகை இவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ கலந்து சமைத்து உண்ணக்கூடாது. உண்டால் நஞ்சாகும்.
மீன் வகை உண்டி, கீரைக்கறி, முள்ளங்கி இவைகளிளான கட்டுகறி, சாம்பார் ஆகியவைகளையும், மிக்க புளிப்பு சுவையுள்ள பழங்களையும் மிகுதியாக உண்டாலும், கம்பு, வரகு, கொள்ளு, கட்டுபயறு ஆகியவைகளை சேர்த்து சமைத்து உண்டாலும் நஞ்சாகும்.
உளுத்தம் பருப்பு, முள்ளங்கி சேர்த்து குசும்பா கீரையுடனும், செம்மறியாட்டின் இறைச்சியுடன் சேர்த்து உண்டால் நஞ்சாகும்.
கிச்சலி பழத்துடன், பால், நெய், தயிர், உளுத்தம் பருப்பு, கரும்பு வெல்லம் சேர்த்துண்டால் நஞ்சாகும்.

என்று உணவு பற்றி சித்தமருத்துவம் கூறுகிறது.

உறக்கம்:

நேரம் என்று பாராமல் நெடுநேரம் தூங்கினாலும், பகல் பொழுதில் தூங்கினாலும் நெடு நாட்கள் தூங்காமல் இருந்தாலும் நோய் வந்து வாழ்நாளை குறைத்துவிடும்.
முக்கியமாக கொழுத்த (பருத்த) உடம்பை உடையவர்கள், கர்பிணியாளர் எண்ணெய் தேய்த்து குளித்தவர், மருந்து உண்பவர் பகலில் உறங்ககூடாது.
நந்த உண்டவனும், நந்த கடிப்பட்டவனும், நெஞ்சுவலி உள்ளவனும், இரவிலும் உறக்கம் குறைத்து கவனமாக இருக்க வேண்டும்.

உடலுறவு:

அளவு கடந்து தம்முடைய விந்துவை செலவு செய்யாமல் அடக்கமாய் இருப்பவர்கள், வலிமை, திறமை, புத்தி கூர்மை, நல்ல நினைவாற்றல், அளவு கடந்த புகழ், நீண்ட ஆயுள், ஐம்பொறிகளும் உரம் பெறுதல், பழுது இல்லா உடற்கட்டு, பிலி கொள்ளா தன்மை பெற்று இருப்பர்.
சித்த மருத்துவம் மாதம் இருமுறை உடலுறவு கொள்வதையே மிகச் சிறந்தது எனக் கூறுகின்றது. எனினும், முன்பனி (டிசம்பர் மாதம், ஜனவரி மாதம்) பின்பனி (பிப்ரவரி மாதம், மார்ச் மாதம்) என்னும் இரண்டு பனிகாலத்தில் விருப்பம் போல் நாள்தோறும் இரவில் உடலுறவு வைக்கலாம். இளவேனிற்காலம்- (ஏப்ரல் மாதம், மே மாதம்), கார்காலம் – (ஆகஸ்ட் மாதம், செப்டம்பர் மாதம்), கதிர்காலம் – (அக்டோம்பர் மாதம், நவம்பர் மாதம்)
இந்த மூன்று காலத்திலும் (6 மாதங்களிலும்) மூன்று நாளைக்கு ஒருமுறை இரவில் உடலுறவு வைக்கலாம்.
முதுவேனிற் காலத்தில் (ஜூன் மாதமும், ஜூலை மாதமும்) பதினைந்து நாட்களுக்கு இருமுறை இரவில் உடலுறவு வைக்கலாம். எனினும் (அமாவசை, சூரியகிரகம், சந்திரகிரகம், பெளர்ணமி, நல்ல பகல் பொழுது, உணவு உண்ட உடன் உடலுறவு கொள்ள கூடாது).

என்று சித்த மருத்துவம் கூறுகின்றது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum