தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறவா வரம் அருளும் ஜோதி வழிபாடு

Go down

பிறவா வரம் அருளும் ஜோதி வழிபாடு Empty பிறவா வரம் அருளும் ஜோதி வழிபாடு

Post  meenu Fri Mar 08, 2013 4:29 pm

சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும் தெய்வாம்சமும் பொருந்திய காலம் தைமாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும். மேலும், ஆன்மீக ஜோதி வள்ளலார், அருட்பெருஞ்சோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான்.

தீப தரிசனம், ஜோதி தரிசனம் என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று. தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கமாகும். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சமாகும்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனத்தையும், இறைவன் ஜோதி சொரூபமாக உள்ளான் என்பதையும், அன்னதானத்தின் மகிமையையும் உணர்த்தியுள்ளார். மேலும் மரணமில்லா பெருவாழ்வு அடைந்து மீண்டும் பிறவாமல் இருக்க போதனை செய்துள்ளார். 25-1-1872 அன்று தைப்பூச நாளில் முதல் முறையாக ஜோதி வழிபாட்டை வடலூரில் துவங்கி வைத்தார்.

அதன்பின் அந்த ஜோதியிலேயே ஐக்கியமானார். அன்று முதல் இன்று வரை தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி ஜோதி தரிசனம் செய்கிறார்கள்.

தைப்பூசத்தின் சிறப்புகள்

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார். நடன நிலையில் உள்ள சிவனை நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமா தேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமாமகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு.

பூச நட்சத்திர நாள் காவடிப் பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள். இந்நாளில் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள். ஆடு, மாடு, கோழி, சேவல், மயில் போன்ற ஜீவராசி களை கோயிலுக்கு அர்ப்பணித்தல், நேர்ந்துவிடுதல் போன்ற வழிபாடுகளை தைப்பூச நாளில் நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் உடலை வருத்தி நடை பயணம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள்.

தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். சென்னை கந்த கோட்டத்து முருகப் பெருமானை துதித்து வள்ளலார் பாடிய பாடலை இந்த நன்னாளில் நாமும் பாடி சகல நலன்களும் பெறுவோம்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும்.
பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்.
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்.
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுநான் வாழ வேண்டும்.
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum