தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி

Go down

 பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி  Empty பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி

Post  meenu Fri Mar 08, 2013 2:25 pm


பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி
கருத்துகள்
10:23:00
Tuesday
2012-09-11
Dow smashes record as US stocks sur...



You need to upgrade your Adobe Flash Player to watch this video.

Get Adobe Flash player
MORE VIDEOS

திருமாலோடு மகாலட்சுமியும் அஷ்டலட்சுமிகளும் சேர்ந்து வங்கக்கடல் ஓரத்தில் கோயில் கொண்டருளும் தலம் இது. இக்கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது சந்நதிகளுடன் திகழ்கிறது. மேரு அமைப்புடன், படியேறி இறங்கி சந்நதிகளை அடையலாம். இந்தப் பாதை ஓம் வடிவத்தில் இருப்பது அற்புதம். இங்கே, வங்கக்கடல், சமுத்ரபுஷ்கரணி எனும் பெயரில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது. தலவிருட்சம், வில்வமரம். வில்வ இலையில் மகாலட்சுமி வசிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குபேரனின் உப வடிவங்களான சங்கநிதியும் பதுமநிதியும் இங்கே உண்டியல் உருவில் சந்நதி கொண்டுள்ளனர்.

தங்கள் சங்கடங்கள் நீங்க சங்கநிதியிலும் நலன்கள் பெருக பதுமநிதியிலும் காணிக்கை செலுத்துவது பக்தர்கள் வழக்கம். மூலக்கருவறையில் மகாலட்சுமி, திருமாலுடன் மூல விக்ரகமாக அதியற்புத அழகுடன் அருள, உற்சவர் ஸ்ரீநிவாசனாக தரிசனம் தருகிறார். மகாலட்சுமியும் திருமாலும் திருமணக்கோலத்தில் அருள்வதால் மகாலட்சுமிக்கு எப்போதுமே ஒன்பது கஜம் புடவையும் திருமாலுக்கு 10 முழ வேஷ்டியும் சார்த்தப்படுகின்றன. இந்த மூல சந்நதியில் அபிஷேக காலங்கள், பூஜா காலங்களில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.

மற்றபடி, எல்லா நேரங்களிலும் தைரியலட்சுமிக்கே அர்ச்சனை. திருமணத் தடை உள்ளவர்கள் இங்குள்ள லட்சுமி நாராயணருக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து, திருமண வரம் பெறுகின்றனர். இங்குள்ள தசாவதார சந்நதியை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகார விருட்சங்களும் இந்தக் கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum