தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசை விநாயகர்

Go down

இசை விநாயகர்  Empty இசை விநாயகர்

Post  meenu Fri Mar 08, 2013 2:23 pm

நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் சிற்பி ஒருவர் மூக்கை உறிஞ்சிக்கொண்டே விநாயகர் சிலையை செதுக்கியதால், இந்த விநாயகர்,
பாவம், மூக்கு உறிஞ்சி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

மதுரை விளக்குத்தூண் அருகே கீழமாசி வீதியில் உள்ள விநாயகர் சிலை அந்நியர் படையெடுப்பால் சேதப்படுத்தப்பட்டது. தலை இல்லாமல் வயிறு, தொந்தியுடன் அருளும் இவர், மொட்டைப்பிள்ளையார் என வணங்கப்படுகிறார்.

மதுராந்தகத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள செய்யூர் பேருந்து நிலையத்தின் அருகே கச்சேரி விநாயகர் எனும் பெயரில் ஆனைமுகனை தரிசிக்கலாம்.

கணபதி அஷ்டோத்திரத்தில் வரும் ஒவ்வொரு நாமாவிற்கும் ஒரு பிள்ளையார் என 108 பிள்ளையார்களை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீசக்ர மேரு வடிவில் அமைந்த எண்கோண வடிவில் ஆறு படிகளில் இந்த விநாயகர்கள் அருள்கிறார்கள்.

காரைக்குடி, கீழைக்கரையில் ஐம்பது வலம்புரி, ஐம்பது இடம்புரி விநாயகர்களோடு சக்தி, மகா, சாம்ராஜ்ய, நர்த்தன, யாக, விஜய, சித்தி-புத்தி என எட்டு கணபதிகளும் அருளாட்சி புரிகின்றனர்.

கேரள மாநிலம், காசரகோட்டிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மதூர் அனந்தேஸ்வரர் சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் உத்தரவின்படி அவரை
முழுதும் அப்பங்களால் மூடி வழிபடும் மூடப்பம் எனும் நிகழ்வு நடைபெறுகிறது.

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் ஆலய மண்டபத்தின் கன்னிமூலையில் நாகராஜரோடு அமர்ந்தருளும் கணபதி வரகுண கணபதி என அழைக்கப்படுகிறார்.

நாகதோஷம் தீர பக்தர்கள் இவரை வணங்குகின்றனர்.

பொன்னேரிக்கு அருகே உள்ள சின்னக்காவணத்தில் அங்கோல கணபதி ஆலயம் உள்ளது. அங்கோலம் எனும் ஏறழிஞ்சல் மரத்தின் கீழ் அருளும் இவருக்கு வடை மாலை சாற்றி 108 பிரதட்சிணம் செய்தால் நினைத்தது நிறைவேறுகிறது.

கதிராமங்கலம், காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனின் தோஷம் போக்கிய சூரிய வரத விநாயகரை தரிசிக்கலாம். தினம் சூரிய கதிர்கள் இவர் மேல் படர்வது அற்புதமான நிகழ்வாகும்.

திருவாளப்புதூர் ரத்னபுரீஸ்வரர் ஆலயத்தின் தேவகோட்டத்தில் ரிஷப வாகனத்தோடு கூடிய நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம்.

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானின் கை, கால், தும்பிக்கைகளைத் தட்டினால் விதவிதமான இன்னிசை எழுகிறது. எனவே
இவர் இசை விநாயகர் என வழிபடப்படுகிறார்.

எட்டயபுரம் பாளையங்கோட்டை பாதையில் உள்ளது, பிரசன்ன விநாயகர் ஆலயம். விஷ்ணு ஸஹஸ்ரநாம முதல் ஸ்லோகத்தில் வர்ணிக்கப்பட்டபடி சிரித்த
முகத்துடன் வரப்ரசாதியாக அருள்கிறார் இவர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum