தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கபிஸ்தலம்

Go down

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கபிஸ்தலம் Empty பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கபிஸ்தலம்

Post  meenu Fri Mar 08, 2013 2:19 pm

கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது. இந்திரத்யும்னன் எனும் மன்னன் எம்பெருமான் விஷ்ணுவைத் தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை பூஜையில் ஈடுபட்டிருந்தபோது துர்வாசர் அவனைக் காண வந்தார். என்னதான் தெய்வ வழிபாடு மேற்கொண்டாலும் குரு வந்தால் பூஜையை நிறுத்தி விட்டு குருவுக்கு வணக்கம் செலுத்துவது நமது மரபு. குருவை காக்க வைப்பதை தெய்வம் கூட பொறுக்காது. ஆனால், மன்னனின் மனம் மாலனிடம் கிடந்தது; அதனால் குருவை அவன் கவனிக்கவில்லை. துர்வாசரின் மனம் கோபத்தில் கொந்தளித்தது. உடனே தன் இயல்புப்படி கோபத்தை சாபமாக்கினார்.
‘‘மதம் பிடித்த யானையாக மாறுவாய். ஆனால், அப்போதும் மாலனிடம் பக்தியை செய்தபடி இருப்பாய்’’ என்று சாபத்திற்குள்ளும் சத்தியத்தை அடையும் பாதையை காட்டினார்.

துர்வாசரின் சாபத்தினால் மன்னன், கஜேந்திரன் என்ற யானையானான். இத்தலத்து குளத்தில் நீர் குடிக்க இறங்கினான். உடனே கஜேந்திர யானை சட்டென்று நிலைகுலைந்தது. அதன் காலை ஓர் முதலை வாயால் கவ்வியிருந்தது. முதலையை உதற முடியாமல், அங்கேயே திகைத்து நின்றது. திருமாலை தொழுதது. முன் ஜென்மத்தில் ‘ஹுஹூ’ எனும் கந்தர்வனாக இருந்தவனே தேவலர் எனும் முனிவரின் சாபத்தினால் முதலையாக வந்து, இப்போது யானையின் காலைப் பற்றினான். ‘‘எப்போது கஜேந்திரனின் காலைப் பிடிக்கிறாயோ அப்போதே உனக்கு முக்தி’’ என்று தேவலர், தேவனை அடையும் வழியையும் சொன்னார், கஜேந்திரன் வருந்திக் கண்ணீர் வடித்தது. ‘‘ஆதிமூலமே....’’ என்று இருதயத்தின் அடியிலிருந்து பிளிறியது. அப்போது கருட வாகனத்தில் வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தால் முதலையை வெட்டிச் சாய்த்து கஜேந்திரனை மீட்டார். இந்தப் புராணம் நிகழ்ந்தது இங்குதான் என்பதால், மூலவர், கஜேந்திர வரதர் ஆனார்.

சரி, இத்தலம் எப்படி பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றானது? இத்தலத்தின் பெயரிலேயே அதற்கான புராணம் உள்ளது. ‘கபி’ என்றால் வானரம் (குரங்கு). திருக்கபிகளான அனுமனும் சுக்ரீவனும் அவர்களை சார்ந்த மற்ற வானரர்களும் வழிபட்ட தலமாதலால் திருக்கபிஸ்தலம் என்றானது. ராவணனை அழித்து ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பிவிட, கிஷ்கிந்தையை சுக்ரீவன் அரசாண்டான். ஆனாலும் சுக்ரீவனுக்குள் இனம் புரியாத துக்கம் கவ்வியது. அண்ணன் வாலியை கொன்று விட்டு இப்படி நாடாளுகிறோமே; தர்மத்தின் முழுவடிவான ஸ்ரீராமர் கையினாலேயே வாலிக்கு மரணம் நேர்ந்ததும் அதற்குத் தானே காரணமாக இருந்ததும் அவன் நெஞ்சை முள்ளாய் தைத்தன.

அண்ணன் இல்லாத இந்த நாட்டை நான் எப்படி ஆளுவது என்று துடித்தான். ‘‘குருதேவா, என் மனம் குற்ற உணர்வில் குறுகுறுக்கிறது’’ என்று குறுமுனி அகத்தியரின் பாதம் பணிந்து வழி கேட்டான். ‘‘காவேரி நதியில் நீராடி, அதன் கரையில் கிருஷ்ணரை ஸ்தாபித்து வழிபடு’’ என்று அருட் கட்டளையிட்டார் முனிவர். ஸ்ரீராமர் காலத்தில் கிருஷ்ணரா? அவதாரங்கள் என்பதே எப்போதும் நித்தியமாக இருப்பதேயாகும். நாராயணன் எடுத்த அவதாரங்கள் அந்தந்த யுகங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ராமாயணத்தில்கூட பல இடங்களில் கிருஷ்ண நாமத்தின் பெருமை பேசப்படுகிறது. இப்போது ராமனாக இருக்கும் சக்திதான் ஆதியில் வராகமாகவும் பின்னால் கிருஷ்ணராகவும் வந்தது.

அப்படி ஆதியில் சுக்ரீவன் இந்த ஆற்றங்கரையில் கண்ணனை வழிபட்டதைத்தான் திருமழிசை ஆழ்வார், ‘ஆற்றங்கரை கிடந்த கண்ணன்’ என்கிறார். அந்த கபியான சுக்ரீவன் கண்ணனை வணங்கியதாலேயே இன்றும் அத்தலம் திருக்கபிஸ்தலம் என்றிருப்பது எத்தனை பொருத்தமானது! அங்கிருக்கும்
கஜேந்திர வரதன், கண்ணனே எனும் பாவனையில் தரிசித்தால், குழலின் ஓசை ஒலிப்பதையும் உணர முடியும்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum