தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோஹன் இப்போதைக்கு இல்லை - கௌதம்

Go down

யோஹன் இப்போதைக்கு இல்லை - கௌதம் Empty யோஹன் இப்போதைக்கு இல்லை - கௌதம்

Post  ishwarya Fri Mar 08, 2013 2:07 pm

யோஹன் அத்தியாயம் ஒன்று படம் இப்போதைக்கு இல்லை என கௌதம் வாசுதேவ மேனன் தனது ட்விட்ட‌ரில் தெ‌ரிவித்துள்ளார்.

விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படப்பாணியில் பிரமாண்டமாக யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்கப் போவதாக கௌதம் தெ‌ரிவித்திருந்தார். விஜய் இடம்பெற்ற விளம்பரங்கள் பத்தி‌ரிகைகளில் வெளிவந்தன. துப்பாக்கிப் படத்துக்குப் பிறகு யோஹன் தொடங்கப்படும், இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பதுவரை முடிவாகியிருந்தது. இந்நிலையில் அவ்வப்போது இப்படம் கைவிடப்பட்டதாகவும் மீடியாவில் கிசுகிசுக்கள் வந்தன.

துப்பாக்கி விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விஜய் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். அப்படியானால் யோஹன்?

ஏ.எல்.விஜய் படத்திற்குப் பிறகு தொடங்கப்படும், இல்லையில்லை படமே கைவிடப்பட்டது என்று இரு வேறு கருத்துகள். சம்பந்தப்பட்ட விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. முதல்முறையாக யோஹன் படம் இப்போதைக்கு இல்லை, நீதானே என் பொன்வசந்தம் முடிந்த பிறகு எனது அடுத்தப் படத்தை தீர்மானிப்பேன் என்று கௌதம் தெ‌ரிவித்திருக்கிறார்.

யோகன் இப்போதைக்கு இல்லை என்றவர் எப்போது தொடங்கும் என்றோ படம் கைவிடப்படவில்லை என்றோ எதுவும் கூறவில்லை. ஆக.

யோஹன் இன்னொரு பகலவன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum