தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி ஆடியோ வெளியீட்டு விழா

Go down

துப்பாக்கி ஆடியோ வெளியீட்டு விழா Empty துப்பாக்கி ஆடியோ வெளியீட்டு விழா

Post  ishwarya Thu Mar 07, 2013 2:52 pm


துப்பாக்கி வழக்கு முடிந்து, விட்டு விடுதலையான மனநிலையில் அடையார் பார்க் ஷெரட்டனில் துப்பாக்கி இசை வெளியீட்டு விழா. வலிக்க வலிக்க வாழ்த்தியவர்களுக்கு மத்தியில் இனிக்க இனிக்க பேசியதோடு ஒரு பாடலையும் விஜய் பாடியது ஐஸ்கி‌‌ரீம் மீது செர்‌ரி மாதி‌ரி அவ்வளவோ டேஸ்ட்.


மாற்றான் ஆடியோ விழாவையே பிஸி என்று வெளிநடப்பு செய்த காஜல் அகர்வால் துப்பாக்கி விழாவில் பிரசன்டானது இன்னொரு பிளசன்ட் சாப்ரைஸ். பேருலயே ஸ்வீட் வச்சிருக்கார் என்று விஜய் பாராட்டியபோது காஜலிடம் மெல்லிய புன்னகை. ஆடியோ விழா என்றால் இசை தவிர்த்து எதை எதையோ கதைக்கும் விழாக்களுக்கு மத்தியில் துப்பாக்கியில் பாடல் எழுதியவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

இதில் மதன் கார்க்கி எழுதிய கூகுள் கூகுள் பாடலை விஜய் பாடியிருக்கிறார். சின்ன திருத்தங்களுக்காக மூன்று முறை கூப்பிட்டோம். மறுக்காமல் வந்து பாடி கொடுத்தார் என்று விஜய்யின் பொறுமையை கோடிட்டு காட்டினார் ஹா‌ரிஸ். காக்க காக்க படத்தைவிட துப்பாக்கி பத்து மடங்கு பிரமாதமாக வந்திருக்கு என்று வில்லங்கமான கம்பா‌ரிஸனை வேறு எடுத்துவிட்டார். இன்னுமா பாஸ் கோவம் போகலை?

இந்தப் படத்துக்கு விஜய் எல்லாமே பெருசா கேட்டார் என்று பெருசா ஒரு டைம் எடுத்துக் கொண்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன். முருகதாஸுக்கு அட்வான்ஸ் தந்தேன், விஜய்க்கு அட்வான்ஸ் தந்தேன், காஜல் அகர்வாலுக்கு அட்வான்ஸ் தந்தேன் என்று அவர் சொல்லிக் கொண்டே போக நமக்கு சந்தேகம். துப்பாக்கியை தயா‌ரித்தது இவரா இல்லை தாணுவா? அதற்கும் அவரே பதில் தந்தார். அப்ப எப்படிடா இந்தப் படம் தாணுவுக்கு கை மாறியது என்று யோசிப்பீர்கள். அது அப்படிதான். எனக்கு என்ன கிடைக்கணும்னு இறைவன் நினைச்சிருக்காரோ அதுதான் கிடைக்கும் என்றார் முதலில் தொடங்கிய அதே உற்சாகத்தோடு.

விஜய் முருகதாஸை குட்டி மணிரத்னம் என்றார். அதைவிட குட்டி ர‌ஜினிகாந்த் என்ற பட்டம்தான் முருகதாஸுக்கு பொருத்தம். உதவியாளர்களை மேடையில் ஏற்றி, இவங்கதான் எல்லாமே, இந்தப் படத்துக்கு இவங்கதான் அதிகமாக உழைச்சிருக்காங்க. நாங்க வெளியே தெ‌ரிவோம், இவங்க உழைப்பு வெளியே தெ‌ரியாது என்றார் பெருந்தன்மையாக. இந்த ர‌ஜினிகாந்த் மனசு யாருக்கு வரும்?
துப்பாக்கி ஆடியோ வெளியீட்டு விழா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum