ராஜமௌலி பட ரீமேக்கில் சந்தானம்?
Page 1 of 1
ராஜமௌலி பட ரீமேக்கில் சந்தானம்?
பிரபல ஹீரோக்கள் இல்லாமல் ஜெயிக்க முடியும் என்று நிரூபிக்க ராஜமௌலி எடுத்தப் படம்தான் மரியாத ராமண்ணா. இதில் ஹீரோவாக முக்கிய வேடத்தில் நடித்த சுனில் ஒரு நகைச்சுவை நடிகர். அதுவரை தொட்டுக்க ஊறுகாயாக இருந்தவரை ராஜமௌலி மெயின் டிஷ்ஷாக்கி அதை விற்றும் காண்பித்தார். இப்போது சுனில் சிக்ஸ்பேக் வைத்த சின்சியர் ஹீரோ.
தமிழில் மரியாத ராமண்ணாவை பிவிபி சினிமா ரீமேக் செய்கிறது. கண்ணனை இயக்குனராக்கவும் திட்டம். சரி, ஹீரோ யார்?
தமிழில் இப்போது கலெக்சனை அள்ளக் கூடிய சிரிப்பையும் தரக்கூடிய ஒரே காமெடியன் சந்தானம்தான். ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் ஏறக்குறைய இவர் ஹீரோவாகதான் வளைய வந்தார். இதனால் இவரையே ஹீரோவாக்க திட்டம் வைத்திருக்கிறதாம் பிவிபி சினிமா. சந்தானத்தின் பதில் என்ன என்பது தெரியவில்லை.
இந்தியில் மரியாத ராமண்ணாவின் ரீமேக்கான சன் ஆஃப் சர்தாரில் சுனிலின் வேடத்தை ஏற்றிருப்பவர் ஆக்சன் ஹீரோவான அஜய்தேவ்கான். அதனால் சந்தானம் நோ சொன்னால் வேறு ஹீரோக்கள் நடிக்கவும் வாய்ப்புள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பரீட்சைக்கு நேரமாச்சு ரீமேக்கில் சந்தானம்!
» மரியாதை ராமண்ணா ரீமேக்கில் சந்தானம்!
» எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் ஸ்ருதிஹாசன்
» ரஜினி பற்றி ராஜமௌலி
» சங்கடத்தில் சந்திர... ஸாரி ராஜமௌலி
» மரியாதை ராமண்ணா ரீமேக்கில் சந்தானம்!
» எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் ஸ்ருதிஹாசன்
» ரஜினி பற்றி ராஜமௌலி
» சங்கடத்தில் சந்திர... ஸாரி ராஜமௌலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum