தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேன்மை வளம் தரும் மேற்கு மனை

Go down

 மேன்மை வளம் தரும் மேற்கு மனை Empty மேன்மை வளம் தரும் மேற்கு மனை

Post  meenu Thu Mar 07, 2013 1:58 pm

கிழக்கு மனையைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் இப்போது மேற்கு மனையைப் பற்றி அறிந்து கொள்வோம். மேற்கு திசையில் அமையும் மனை பெண்கள், சந்ததியினர், ஏதேனும் விவகாரம், நீதி, அரசியல் ஆகியவற்றைச் சார்ந்ததாகவோ, இந்த இனங்களில் வளர்ச்சி அல்லது பாதிப்புகளை அளிக்கக்கூடியதாகவோ அமைகிறது. பெண்கள் முன்னேற்றம், அவர்களுடைய அதிகாரப் போக்கு, ஆதிக்க உணர்வு, அவர்களுடைய நல்வளர்ச்சி, ஒரு நீதிபதியாக வகிக்கக்கூடிய நடுநிலைமை, சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வெற்றி ஆகியனவும் மேற்கு மனையைச் சார்ந்து உள்ளன. அதோடு, அரசியலில் ஈடுபாடு, அண்டை அயலாருடன் அன்யோன்யம் அல்லது விரோதம், ஏதேனும் ஒரு குழுவின் பொது ஜன தொடர்பாளர், அதிகாரி, பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்கள், தரகர் ஆகியோர் வாழ்க்கையில் சம்பந்தம் கொண்டுள்ளது இந்த மேற்கு திசை மனை.

வீதி, தெரு அல்லது சாலையை (வாஸ்துவைப் பொறுத்தவரை, இந்த மூன்றும் தனித்தனி குணம் கொண்டவை) மேற்கு திசையில் கொண்டு, அதற்குக் கிழக்காக அமையும் மனை மேற்கு மனையாக கருதப்படும். மேலே குறிப்பிட்ட வீதி, தெரு அல்லது சாலை, வடக்கு-தெற்காக செல்லும் பாதையாக அமையும். எனவே, மேற்கு என்று அழைக்கப்படும் மனை, பல்வேறு நல்ல நிலைகளுக்கு ஊக்கப்படுத்துவதாகவும், வளர்ச்சிகளுக்கும் ஆதாரமானதாக அமையக்கூடியது எனலாம்.

மேற்கிலுள்ள வீதி, மனையைவிட உயரமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், இது நல்ல மனையாக கருதப்படும். இதில் மேற்கு வாயவியம் எனப்படும் முன்பகுதி வளர்ந்து இருந்தால் கூடுதல் பலன்கள் உண்டு.

மேற்கு மனையின் வசதிகள்

மனையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிறைய காலியிடம் விட்டு கட்டடம் அமையுமானால் அது பல நற்பலன்களை வழங்கும். மேற்கு பகுதியில் கட்டடம் உயரமானதாக எழுப்பப்படுமேயானால், கட்டடத்தின் அழகு கூடுவது மட்டுமன்றி, அது வாஸ்து பலமும் அதிகம் பெறும். இத்தகைய மனையில் அமையும் கட்டடத்தின் சமையலறை, பூஜை அறை போன்றவை மிக நேர்த்தியாக உரிய இடங்களில் அமைய வாய்ப்பு கிட்டும். கிணறு, போர்வெல், நிலத்தடி தொட்டி போன்றவற்றை கன கச்சிதமாக வடகிழக்கில் அமைக்க முடியும்.

இது போன்ற ஒரு கட்டடத்தில் அதாவது வீட்டில், வடமேற்கில் வரவேற்பறை எனப்படும் ஹால் அமைக்கப்பட்டு, அங்கே மிக முக்கியமாக நல்ல பல முடிவுகள் எடுக்கப்படுமானால், அந்த முடிவுகள் அற்புதமான நல்விளைவுகளை அளிக்கும். இதனால் குடும்பம் மேலோங்கியும் குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களுக்கு சமுதாயத்தில் உயர் பதவி தானே வந்து சேரும்; கூடவே பெயரும் புகழும் கிட்டும். இப்படி மேற்கு மனையை வாங்கி வீடு கட்டும் போது அது பல நன்மைகளை நல்குவதாக இருக்கிறது.

ஆனால், பொதுவாக தரகர்கள் மேற்கு மனையை அவ்வளவாக விரும்புவதில்லை; சிபாரிசும் செய்வதில்லை. (இந்த காலத்தில் மனை என்று ஒன்று அதில் ஒரு ஃப்ளாட் என்று அமைந்தால் போதாதா, சொந்தத்தில் வீடு என்று ஒன்று வேண்டும்; அது எங்கே, எப்படி இருந்தால் என்ன என்கிறீர்களா? இந்தக் கருத்து, உங்களது மிகச் சிறப்பான வளர்ச்சிக்கு உதவ முடியாமல் போகலாம்; ஆகவே யோசித்துச் செய்யுங்கள்) ஆனால், இதை மனதில் கொள்ளாமல், மனை வாங்கும்போதோ, அதற்குப் பிறகு அந்த மனையில் வீடு கட்டும்போதோ, வடக்கு, கிழக்கு மனைகளை விட மேற்கு மனையாக சிந்தித்தீர்களானால், அது சிறப்பான பலன்களைக் கொடுக்கக்கூடியதாகவே அமையப் பெறும்.

உதாரணமாக மேற்கு நோக்கிய முருகன் திருத்தலமான பழனி, தமிழ்நாட்டு கோயில்களிலேயே அதிக வருவாய் ஈட்டுகிற, அதிக எண்ணிக்கையில் பக்தர்களை ஈர்க்கும் கோயிலாகத் திகழ்கிறதை நாம் காண்கிறோம். இந்த மேற்கு மனையிலும் இன்னும் சில வாஸ்து அம்சங்களைப் பார்க்கலாம். கிழக்குப் பகுதியும் வடக்குப் பகுதியும் சரிவாக அமைந்து, மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் மேடாக இருக்குமேயானால், இதனால் கூடுதல் பலன்கள் பல உண்டு. தெற்கு, மேற்கு திசைகளில் குன்றுகள், மலைகள், அல்லது ஏதேனும் உயரமான கட்டிடம் கொண்ட அமைப்பாக இருக்குமானால், இதனால் பொருளாதார ஏற்றம், பெரும் புகழ் ஆகியன கிடைக்கும்.

கேரள மாநிலத்தை இன்னொரு உதாரணமாகக் காட்டலாம். இந்த மாநிலத்தின் மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இது தெற்கிலிருந்து வடக்குவரை கடற்கரையை ஒட்டியே நிலை கொண்டிருப்பதன் காரணமாக, மற்ற மாநிலங்களைவிட கேரளத்து மக்கள் உலகின் பலபாகங்களுக்கும் சென்று பணியாற்றி, அதிக அளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பெண்களுக்கு ஏற்றமிகு வாழ்வு அமையப்பெறுவதற்கும், அவர்கள் அதிக வனப்புடன் திகழ்வதற்கும், அவர்களுக்கு உரிமைப்படி சொத்துகள் கிடைப்பதற்கும் வாஸ்து அமைப்பாக இந்த மேற்குத் தொடர்ச்சி மலை நிலைகொண்டிருப்பதை முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

ஆக, மேற்கு மனைகள் வியக்கதகு நல்ல பலன்களை அளிப்பவையாகவே பெரும்பாலும் அமைகின்றன. இதற்கு நேர் எதிராக, வடகிழக்கு மாநிலங்கள் கிழக்கே இமயமலையை கொண்டிருப்பதும், மேற்கே ஆறுகளை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அந்த மாநிலங்களில் ஏற்படாததும் நக்ஸலைட் போன்ற அரசுக்கு எதிரான சக்திகள் அதிகமாவதற்கும் காரணங்களாகச் சொல்லலாம். ஆக, மேற்கு என்பது பல வளர்ச்சிக்கு வழிகோலுகிறது. எனவே, மேற்கு மனையை விரும்பி வாங்கி முறைப்படி வீடு கட்டுவோமேயானால் பொருளாதார ஏற்றமும் புகழும் ஆன்ம பலமும் பெற முடியும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum