தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னொரு உள்ளத்தை அள்ளித்தா - ஆசையை கிளப்பும் அஸ்லம்

Go down

இன்னொரு உள்ளத்தை அள்ளித்தா - ஆசையை கிளப்பும் அஸ்லம்  Empty இன்னொரு உள்ளத்தை அள்ளித்தா - ஆசையை கிளப்பும் அஸ்லம்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:59 pm


சுந்தர் சி. என்ற பெயரை நெஞ்சுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்த படம் உள்ளத்தை அள்ளித்தா. பார்த்தவர்கள் அனைவரும் மனதை பறிகொடுத்த இந்த‌க் காமெடி கிளாஸிக்கின் இரண்டாம் பாகம் எடுக்கும் துணிச்சல் சுந்தர் சி.க்குகூட இருக்குமா தெ‌ரியாது. அந்தளவு படம் மிகப்பெ‌ரிய ஹிட்.

உள்ளத்தை அள்ளித்தா அளவுக்கு இல்லாவிடிலும் உள்ளத்தை கிள்ளித் தரும் அளவுக்காவது நம் படம் இருந்தால் போதும் என்று இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்க, என்னுடைய படம் இன்னொரு உள்ளத்தை அள்ளித்தா என்று போல்டாக அறிவித்திருக்கிறார் ஒருவர். அவர் அஸ்லம். பாகன் படத்தின் இயக்குனர்.

பெ‌ரிய ஸ்டார்களை வைத்து படமெடுப்பவர்களைவிட சின்ன பட்ஜெட்டில் காமெடி படம் எடுப்பவர்களுக்குதான் கோடம்பாக்க மார்க்கெட்டில் இப்போது கிராக்கி. பாகன் இந்த குணாம்சங்களுடன் வந்த படம். அதன் இயக்குனரான அஸ்லம் அடுத்தப் படமான முஸ்தபாவை விரைவில் தொடங்குகிறார். பெ‌ரிய ஹீரோ ஒருவர்தான் ஹீரோவாவாம். படம் இன்னொரு உள்ளத்தை அள்ளித்தா போலிருக்கும் என ஆசை காட்டியிருக்கிறார்.

பொறுத்திருந்து பார்க்கலாம்... அஸ்லத்தின் உள்ளத்தையும் அவர் அள்ளித்தரப் போவதையும்.
உள்ளத்தை அள்ளித்தா, அஸ்லம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum