தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் ஜோடியானார் அமலா பால்

Go down

விஜய் ஜோடியானார் அமலா பால்  Empty விஜய் ஜோடியானார் அமலா பால்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:57 pm


சிந்துசமவெளியில் நடித்த அமலா பாலின் இப்போதைய மார்க்கெட் நம்ப முடியாதது. மைனா என்ற ஒரே படம் அமலா பாலை உச்சத்தில் வைத்தது, கூடவே சீயான், இயக்குனர் விஜய் ஆகியோ‌ரின் க‌ரிசனம். கேரளாவின் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர் இன்று ஐந்து நட்சத்திர விடுதி தவிர்த்து எதிலும் தங்குவதில்லை. பேச்சும் நடத்தையும் எலிசபெத் டெய்ல‌ரின் பேத்தியோ என்று எண்ண வைக்கும்.


சினிமாவுக்கு அதிலும் தமிழ் சினிமாவுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. ச‌ரியாகச் சொன்னால் இப்படி கர்வத்துடன் கழுத்தைப் பிடிப்பவர்களைதான் பிடிக்கும். கால்ஷீட் சொதப்பினாலும், பிரமோஷனுக்கு வரமாட்டேன் என்று பிவாதம் பிடித்தாலும் மீண்டும் மீண்டும் அவர்களையே அவர்கள் கேட்காத சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்வார்கள். சமீபத்திய உதாரணங்கள் காஜல் அகர்வால், அமலா பால்.

சந்திர பிரகாஷ் தயா‌ரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக அமலா பால் நடிப்பதாக தயா‌ரிப்பாளர் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


‌ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், நீரவ் ஷா கேமரா, எடிட்டிங் ஆண்டனி, பாடல்கள் நா.முத்துக்குமார், கலை ஆர்.கே.நாகுரா‌ஜ்.

புதிய அலைகள் டீம் இப்போதும் தாண்டவம் கதைத் திருட்டு தொடர்பாக இயக்குனர் விஜய் மீது கடுப்பில் இரு‌ப்பதால் வெளிநாட்டில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் இயக்குனர் விஜய்யே எழுதியிருக்கிறார் (உதவி யார் அஜயன்பாலாவா?).

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum