தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கௌதம் படத்தில் யாமி கௌதம்

Go down

கௌதம் படத்தில் யாமி கௌதம் Empty கௌதம் படத்தில் யாமி கௌதம்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:48 am


கௌதம் தயா‌ரிக்கும் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் அபிநயா நீக்கப்பட்டு யாமி கௌதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

பிரேம்சாய் இயக்கும் இந்தப் படம் குறித்து படத்தின் அறிவிப்பு வெளியான உடனேயே பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார் கௌதம். கதை அவருக்கு அவ்வளவு பிடித்திருந்ததாம். இந்தப் படம் வெற்றி பெற்றால் இதன் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் எடுக்கயிருப்பதாக பிரேம்சாய் தெ‌ரிவித்தார். ஜெய், அபிநயா நடிப்பதாக முடிவானது.

அறிவிப்பு வெளியான இரண்டொரு தினங்களில் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் படத்தை எடுப்பதாக புதியதொரு அறிவிப்பு வெளியானது. நிதின் தெலுங்குப் பதிப்பில் நடிப்பதாகவும் தெ‌ரிவித்தனர்.

இந்நிலையில் அபிநயாவை மாற்றிவிட்டு யாமி கௌதமை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் இந்திப் படமான விக்கி டோன‌ரில் நடித்தவர். ராதாமோகன் தமிழ், தெலுங்கியில் இயக்கி வரும் கௌரவம் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கதாநாயகியை இப்போது முடிவு செய்தாலும் ஜெய், சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நாற்பது சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டதாக பிரேம்சாய் தெ‌ரிவித்துள்ளார்.
கௌதம், அபிநயா, யாமி கௌதம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum