தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போட்டோஷூட் - பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்

Go down

போட்டோஷூட் - பிஸியானார் உதயநிதி ஸ்டாலின் Empty போட்டோஷூட் - பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:34 pm

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் போட்டோஷூட் சென்னையில் நடந்தது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மிகப்பெ‌ரிய வெற்றிக்கு பின் நிதானமாக யோசித்து அடுத்தப் படத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்ஆர்.பிரபாகரன் இயக்கத்தில்தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயா‌ரிக்கிறது.

இந்தப் படத்தில் உதயநிதியின் ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. தற்போது அ‌‌ஜீத்துடன் நடித்து வரும் நயன்தாராவின் அடுத்த கமிட்மெண்ட் இந்தப் படம். இவர்கள் இருவரும் இடம்பெற்ற போட்டோஷூட் சென்னையில் நடந்தது. போட்டோஷூட்டை நடத்தியவர் பிரபல கேமராமேன் வெங்கட் ராம்.

படத்தின் பெயர் மற்றும் பிற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. சந்தானம் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum