தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாளப் படம் - நீக்கப்பட்டார் தன்ஷிகா

Go down

மலையாளப் படம் - நீக்கப்பட்டார் தன்ஷிகா  Empty மலையாளப் படம் - நீக்கப்பட்டார் தன்ஷிகா

Post  ishwarya Tue Mar 05, 2013 12:47 pm

ஆடி போய் ஆவணி வந்தா நல்லா வருவேன் என்ற நம்பிக்கையில் இருக்கும் பல நடிகைகளில் தன்ஷிகாவும் ஒருவர். பரதேசி வந்தால் எங்கேயோ போய்டுவேன் என்று நம்புகிறார் தன்ஷிகா. இப்படிதான் அரவானின் போதும் நம்பினார்.

மலையாளத்தில் ஷா‌ஜி கைலாஷ் இயக்கும் படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க தன்ஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்ளவில்லை. பரதேசி டப்பிங் போய்க் கொண்டிருக்கிறது என்று தன்ஷிகா விளக்கம் அளிக்க ஷாஜி கைலாஷும் பரவாயில்லை அப்புறம் பார்த்துக்கலாம் என விட்டுக் கொடுத்தார்.

ஆனால் தொடர்ந்து தன்ஷிகா படப்பிடிப்பை புறக்கணிக்கவே ஷாஜி கைலாஷுக்கு சந்தேகம் தட்டியிருக்கிறது. பரதேசி சென்சாரே முடிந்த நிலையில் தன்ஷிகா மட்டும் டப்பிங் பேசுகிறாரா என்று விசா‌ரித்ததில் மீரா கதிரவனின் விழித்திரு படத்தில் அம்மணி பிஸியாக இருந்தது தெ‌ரிய வந்துள்ளது.

அப்புறமென்ன தன்ஷிகாவுக்கு கல்தா கொடுத்து வேறு ஹீரோயினை புக் பண்ணிவிட்டார்.

மாஸ் இயக்குன‌ரின் படம் கிடைத்தும் தமிழ்ப் படத்துக்கு முன்னு‌ரிமை தந்த தன்ஷிகாவுக்கு தாராளமாக ஒரு ஓ போடலாம்.
தன்ஷிகா, ஷாஜி கைலாஷ், பரதேசி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum