தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் தினத்தில் அலெக்ஸ் பாண்டியன்?

Go down

விஸ்வரூபம் தினத்தில் அலெக்ஸ் பாண்டியன்? Empty விஸ்வரூபம் தினத்தில் அலெக்ஸ் பாண்டியன்?

Post  ishwarya Mon Mar 04, 2013 5:39 pm


சன் பிக்சர்ஸ் படங்களே தேவலாம் என்கிற அளவுக்கு தொலைக்காட்சியில் நிமிடத்துக்கொரு விளம்பரம் போட்டு தலைவலி தருகிறார் ஞானவேல்ராஜா. படம் எதுவென்று சொல்லாமலே தெ‌ரிந்திருக்கும், அலெக்ஸ் பாண்டியன்.

தொண்ணூறுகளில் வந்த தெலுங்கு படாவதி டப்பிங் படங்களின் ஸ்டைலில் நடனங்கள், சண்டைக் காட்சிகள்... முதல் மூன்று தினங்களில் மொத்த வசூலையும் அள்ளிவிடுவது என்ற வெறியில் இருப்பவர்கள் வேறொரு அதிரடியில் இறங்கியிருக்கிறார்கள்.

இதன் ‌ரிலீஸ் தேதி 12. இன்னும் நான்கு தினங்களில் என்றுதான் விளம்பரமும் செய்கிறார்கள். ஆனால் ஒருநாள் முன்னதாக பதினொன்றாம் தேதி விஸ்வரூபம் வெளியாகும் அதே தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

கடைசி நேரத்தில் ‌ரிலீஸ் தேதியை மாற்றுவது அ‌ரிதாகவே நடக்கும். படத்தை தயா‌ரித்து வெளியிடுவது ஸ்டுடியோ கி‌ரின் ஞானவேல் ராஜா என்பதால் இதுவும் செய்வார்கள், இதற்கு மேலேயும் எகிறுவார்கள். நாளையே படத்தின் ‌ரிலீஸ் தேதி 11 என விளம்பரம் வந்தால் ஆச்ச‌ரியப்படாதீர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum