தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூ... கமலின் அடுத்த மூவ்?

Go down

மூ... கமலின் அடுத்த மூவ்? Empty மூ... கமலின் அடுத்த மூவ்?

Post  ishwarya Mon Mar 04, 2013 1:22 pm

எனது அடுத்தப் படத்துக்கு மூ என்ற தலைப்பை விரைவில் பதிவு செய்யப் போகிறேன்.இவ்வளவுதான் கமல் சொன்னார். இதற்கு பல பக்கங்களுக்கு விளக்க உரை எழுதப்பட்டிருக்கிறது. அதில் சிலவற்றை பார்க்கலாம்.

விஸ்வரூபம் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் என கமல் தெரிவித்தார். இரண்டாம் பாகத்தின் காட்சிகள் பலவும் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை கமல் இன்னும் மறுக்கவில்லை.

முதல் பாகத்தில் தப்பிச் செல்லும் முல்லா உமரை இரண்டாவது பாகத்தில் கமல் தேடி அழிப்பார், அந்த இரண்டாம் பாகத்தின் தலைப்புதான் மூ என்கிறார்கள். இந்த மூ தமிழ், இந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தயாராக உள்ளது, கமல் சொன்ன அவ‌ரின் ஹாலிவுட் படம் இதுதான் எனவும் கூறுகிறார்கள்.

மருதநாயகம் தொடங்கி மர்மயோகி வரை பல படங்கள் அறிவிப்போடு நின்றிருப்பதால் மூ விஷயத்தில் முந்தி‌ரிக் கொட்டையாக யோசிக்காமல் கமலின் அடுத்த அறிக்கைக்கு காத்திருப்பதே சிறந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum