ஓநாய்க்கு இளையராஜா இசை?
Page 1 of 1
ஓநாய்க்கு இளையராஜா இசை?
மிஷ்கின் இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமூடி தோல்விக்குப் பிறகு மிஷ்கின் தனது லோன் வுல்ஃப் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்த ஒரு தகவல் தவிர இதுவரை மிஷ்கின் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இளையராஜா இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதன் பிறகு இளையராஜாவின் புகழ்பாடுவதே மிஷ்கினின் வேலையாக இருந்தது. இளையராஜா இருந்த மேடையில் இளையராஜாவுடன் ஒவ்வொரு இளம் இயக்குனரும் ஒரு படமாவது செய்யணும் என்று கூறி இளையராஜாவின் கோபத்துக்கு ஆளானார் மிஷ்கின். நீ என்ன எனக்கு பிஆர்ஓ வா என்று அந்த மேடையில், இளையராஜா மிஷ்கினை கடிந்து கொண்டார். அதற்குப் பிறகு இளையராஜா குறித்து மிஷ்கின் வாய் திறப்பதில்லை. இவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என அனைவரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் ஓநாய்க்கு இளையராஜா இசையமைக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடம் புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது முக்கியமானது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இளையராஜா, மிஷ்கின்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விநியோகஸ்தரானார் இளையராஜா!
» லண்டனில் இளையராஜா
» இனி இயந்திரங்கள்தான் இசை அமைக்கும்: இளையராஜா.
» அஜீத் படத்தில் இளையராஜா
» தெலுங்கிலும் வாசிக்கிறார் இளையராஜா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum