தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆணியே பிடுங்கலை - விஷால் ஆத்திரம்

Go down

ஆணியே பிடுங்கலை - விஷால் ஆத்திரம்  Empty ஆணியே பிடுங்கலை - விஷால் ஆத்திரம்

Post  ishwarya Sat Mar 02, 2013 6:24 pm

விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் தம்மாதுண்டு கமெண்ட் எழுதினார் விஷால். கமலுக்கே இந்த நிலையா, நடிகர் சங்கம் என்ன செய்யுது? இதுதான் மேட்டரே. நடிகர் சங்கம் என்ன செய்யுது என்ற வ‌ரி அதிமுக அனுதாபிகளான ராதாரவியையும், சரத்குமாரையும் உசுப்பிவிட்டது. அதிலும் ராதாரவி சொன்ன வார்த்தைகள் செமகாட்டம்.

நடிகர் சங்கத்தை இப்படி நடுத்தெருவில் விமர்சிக்கலாமா, சங்கத்திலிருந்து உங்களை நீக்கினால் என்ன என்று விளக்க நோட்டீஸ் கேட்டு மஞ்ச கடுதாசி அனுப்பினர். ஆம்புட்டாருய்யா விஷாலு என்றுதான் பலரும் நினைத்தனர். பட், நடந்தது வேறு. விளக்க நோட்டீசில் ராதாரவியை விளாசியிருக்கிறார் விஷால்.

கமல் விவகாரத்தில் எல்லோரும் என்ன பேசினாங்களோ அதைதான் நானும் எழுதினேன். சங்கத்தை எந்த ரூல்ஸ்படியும் விமர்சிக்கலை. இங்கிலீஷ் தெ‌ரிஞ்சவங்களுக்கு நான் எழுதினதன் அர்த்தம் தெ‌ரியும். சமர் விவகாரத்தில் யாரும் எந்த ஆணியும் எனக்காக பிடுங்கலை... என்ற‌ ‌ரீதியில் காய்ச்சியிருக்கிறார்.

இன்னும் கடுப்பேற்றினால் பட்டுக்கோட்டை, மலைக்கோட்டைன்னு எல்லா கோட்டையும் பார்த்தவ‌‌ண்டா என்று தொடை தட்டி இறங்கினாலும் இறங்குவார். இத்தோடு பிரச்சனையை முடித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
விஸ்வரூபம், விஷால், நடிகர் சங்கம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum