தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் தடை நீங்கியது

Go down

விஸ்வரூபம் தடை நீங்கியது Empty விஸ்வரூபம் தடை நீங்கியது

Post  meenu Sat Mar 02, 2013 1:12 pm

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான
தடை உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 25 அன்று விஸ்வரூபம்
வெளியாகவிருந்தது, ஆனால் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்பின்
பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, குற்றவியல்
நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இருவாரத் தடை விதித்தது.

கமல்ஹாசன்
தரப்பினர் சென்னை நீதிமன்றத்தினை அணுகியபோது, ஒரு நீதிபதி அரசின் தடையினை
நிறுத்திவைத்து உத்திரவிட்டாலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,
அரசின் மேல் முறையீட்டினை ஏற்று தடை தொடரும் எனக் கூறிவிட்டது.




விஸ்வரூபம் தடை நீங்கியது 130128100556_kamal_kamalahasan_kamal_haasan_viswaroopam_tamil_film_304x171_bbc_nocredit

பின்னர் நேற்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில்
நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது சில ஆட்சேபிக்கப்பட்ட
காட்சிகளை நீக்குவதாக கமல்ஹாசன் ஒத்துக்கொண்ட நிலையில் முஸ்லீம் அமைப்பினர்
தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறாக கடந்த 11 நாட்களாக இருந்துவந்த முட்டுக்கட்டைஒருவழியாக நீங்கி,திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஆனால் இன்னமும் வெளியிடும் தேதி அறிவிக்கப்படவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum