தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்

Go down

நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்  Empty நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்

Post  meenu Wed Feb 27, 2013 2:51 pm

உலகிலுள்ள இனங்களிலேயே இந்தியர்கள் தான் நீரிழிவு நோய்க்கு (Diabetes Mellitus) அதிகம்
ஆளாகிறார்கள். பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களும்
நீரிழிவு நோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு விஷயம்
தெளிவாகிறது.

எங்கு
வாழ்ந்தாலும் இந்தியர்கள் தவறாமல் நீரிழிவு நோயின் பாதிப்புக்கு
உள்ளாகிறார்கள். ஆகவே நாம் இந்த நோயைப் பற்றி தெளிவாக அறிதல் மிகவும்
அத்தியாவசியமாகிறது.



இந்தியா ஒரு "நீரிழிவு நாடு"

உலகிலேயே
அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடு இந்தியா. சமீபத்திய
புள்ளி விபரங்களின் படி இந்தியாவில் 25 மில்லியன் நீரிழிவு நோயாளிகள்
உள்ளனர். வல்லுனர்களின் கணிப்புப்படி இத்தெகை 2010-ல் 35 மில்லியனாகவும்
2025-ல் 57 மில்லியனாகவும் உயரவுள்ளது.


"தேசிய
நகர்ப்புற நீரிழிவு கருத்துக் கணிப்பு" என்ற பெயரில் சென்னையிலுள்ள எம்.வி
மருத்தவமனை சென்னை உட்பட்ட இந்தியாவின் ஏழு மாநகரங்களில் மேற்கொண்ட
கருத்துக் கணிப்பில் இந்தியாவிலுள்ள இந்தியர்களுக்கு நீரிழிவு
ஏற்படுவதற்கான காரணங்கள் புலனாயின. மரபியல் அம்சம் தவிர உடற்பயிற்சியும்
உடலுழைப்பும் அற்ற வாழ்க்கை முறையே நீரிழிவு நோய்க்கு பச்சை சிக்னல் காட்டி
வரவேற்கின்றன என்பது தெளிவாகியுள்ளது.


சீனர்கள்,
கொரியர்கள் மற்றும் ஐரோப்பியருடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கு
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை. ஊதாரணமாக, ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு
பள்ளியிலும் ஒரு நீச்சல் குளம் இருக்கும். தினமும் மாணவர்கள் விளையாட்டு
வகுப்பில் பங்கேற்க வேண்டும். நியூசிலாந்து நாட்டு மக்களின் பிரியமான
பொழுதுபோக்கே "புஷ் வாக்கிங்" எனப்படும் புதர் காட்டுக்குள் கொள்ளும்
நடைபயிற்சியாகும்.


நியூசிலாந்தில்
மாலை வேளைகளில் பெரும்பாலோனோரை நடைபயிற்சியின் பொருட்டு புதர்காடுகளில்
காணலாம். எனில் இந்தியர்களை தொலைக்காட்சிகள் முன்னால் சோபாக்களில் காணலாம்
என்பதே வேதனையூட்டும் நிதர்சனம்.


நகரவாசிகளே உஷார்:

எம்.வி
மருத்துவமனை நடத்திய கருத்துக் கணிப்பில் மற்றுமொரு அதிர்ச்சித் தகவலும்
வெளியானது. கிராமங்களில் வாழ்வோரை விட மாநகர் வாழ் மக்கள் அதிகமாக நீரிழிவு
நோயால் அவதியுறுகிறார்கள் என்பதே அது. இந்தியாவிலுள்ள ஒரு பில்லியன்
மக்கள் தெகையில் 30% மாநகரவாசிகள். இவர்களில் 12 சதவீதத்தினர் நீரிழிவு
நோயாளிகள். நம்மூர் மேடவாக்கத்தையே எடுத்துக் கொள்வோமே! பத்து
வருடங்களுக்கு முன் மேடவாக்கம் ஒரு கிராமம். அப்போது அங்கு நீரிழிவு
நோயாளிகளின் எண்ணிக்கை 2.4%. இப்போது நகரமாகியுள்ள இங்கு 5% மக்கள்
நீரிழிவு நோயால் துன்புறுகிறார்கள்.


மரபியல் சாபக்கேடு:

இயல்பான
மரபியல் காரணங்களால் தவிர்க்க இயலாமல் இந்தியர்கள் நீரிழிவு நோயின்
தாக்குதலுக்கு இரையாகி விடுகிறார்கள். அமெரிக்கர்களிடையே அப்பா நீரிழிவு
நோயாளி என்றால் அந்நோய் குழந்தையைத் தாக்கும் வாய்ப்பு 20%
; ஆனால்
இந்தியர்களிடையேயோ இவ்வாய்ப்பு 30ரூ. அமெரிக்க பெற்றோர் இருவரும் நீரிழிவு
நோயாளிகள் எனில் குழந்தைகளுக்கு அந்நோய் வரும் வாய்ப்பு 25%; ஆனால்
இந்தியர்களை பொறுத்த வரையில் 60%. பிற இனங்களோடு கலக்காத தனித்த
இனக்குழுவாக இந்தியர்கள் இருப்பது இந்த மரபியல் குளறுபடிக்கு ஒரு காரணமாக
இருக்கலாம் என்று கருதுகிறார் மருத்துவர் ராமசந்திரன்.

சர்க்கரை சகிப்புத் தன்மை குறைபாடு (IGT)

இந்திய மாநகர் வாழ் மக்களில் 14 சதவிதத்தினர் இந்நோயால் பாதிக்கபட்டுள்ளனர். IGT (Impaired Glucose Tolerance) எனப்படும்
இந்த சர்க்கரை சகிப்புத் தன்மை குறைபாட்டு நோய் நீரிழிவு நோயின் மற்றொரு
எளிய வடிவமே. இந்த H -ஆல் தாக்கப்பட்டோர் சீக்கிரமே நீரிழிவு நோயாளிகளாகும்
வாய்ப்புகள் அதிகம். வைரஸ் காய்ச்சலுக்கு முன் தோன்றும் ஜலதோஷம் போன்றது
இது. இந்தியாவில் 20-40 வயதிற்கு உட்பட்டோர் இந்நோயால் அவதியுறுகிறார்கள்.
நெஞ்சை உலுக்கும் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள்: நீரிழிவாலும், ஐழுகூ
ஆலும் பாதிக்கப்பட்ட மாநகரவாசிகளின் சதவீதம் 26. அதாவது மாநகர்வாழ் மக்கள்
தொகையில் கால்வாசி. இந்தியாவில் 20 வயதிற்கு உட்பட்டோரில் 1,77,000 பேர்கள்
நீரிழிவு நோயாளிகள். மாரடைப்பாலும், ஸ்ட்ரோக்காலும் ஏற்பட்டதாக
கருதப்படும் இறப்புகளில் 65%க்கான மறைமுகக் காரணம் நீரிழிவு நோய்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum