தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

Go down

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்               Empty பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

Post  ishwarya Tue Feb 26, 2013 6:08 pm

கேரட்டையும், டர்னிப்பையும் (நூல்கோல்) சமஅளவு எடுத்து வேகவைத்து மசித்து அந்த கலவையை முகத்தில¢பூசிக் கொள்ளுங்கள். பின், கழுவும்போது முதலில் ஒரு சிறிய துண்டு பஞ்சை பாலில் தொட்டு அந்த காய்ந்த பேக்கை எடுத்துவிட்டு பின் முகத்தை தண்ணீரில் கழுவவும் டர்னிப் முகத்தை சுத்தம் செய்கிறது. காரட் விட்டமின் ஏ உள்பட தோலுக்கு மிகத் தேவையான சத்துக்களைத் தருகிறது.
உருளைக்கிழங்கு ஜூஸை முல்தானி மெட்டியில் விட்டுக் கலக்கி பேஸ்ட் தயாரித்து உபயோகிக்கலாம். மெல்லிய பூத்துருவலாக உருளையைத் துருவிக்கொண்டு பிழந்தால் ஜூஸ் கிடைக்கும். இது முகத் தசைகளை நன்கு இறுக்கமாக்கும். முகத்திலுள்ள கரும்புள்ளி, கறைகள் போன்றவற்றைப் போக்கும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தில் பேக் போடுவதால் முகத்தின¢வயிர்வை ஓட்டைகள் எல்லாம் நன்கு இறுகி முகம் மெழுகுபோல் வழுவழுவென்று ஆகும். ஆப்பிள் பழத்தை (அரைப் பழம்போதும்) தோல் சீவி மசித்துக் கொள்ளுங்கள். கூட கால் ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் முட்டை மஞ்சள் கரு சேர்த்து பேக் போடலாம். முட்டையைத் தவிர்த்து விட்டும் போடலாம். இதுவும் தோலுக்கான உணவே.
முதல் நாள் இரவே இரண்டு பாதாம் பருப்பையும் இரண்டு துண்டு குங்குமப் பூவையும் சிறிது பாலில் ஊற வையுங்கள். காலையில் அதை அரைத்து முகத்தில் தடவலாம். தண்ணீர் பதம் அதிகமாக இருக்கிறது என்றால் கொஞ்சம் முல்தானி மெட்டியையும் சேர்த்துக் கொள்ளலாம். தோலுக்கு சுருங்கி விரியும் தன்மையைத் தரும் விட்டமின் ஈ பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது.
வெள்ளரி ஜூஸ் 1 ஸ்பூன், புதினா ஜூஸ் கால் ஸ்பூன், படிகாரத்தூள் ஒரு சிட்டிகை கலந்தால் சற்றே கெட்டியான திரவம் போல வரும். இதை முல்தானி மெட்டி மற்றும் முட்டை வெண்கரு கலந்து பேக்காக போடலாம். முக சுருக்கத்தைப் போக்கும் மிக அற்புதமான பேக் இது. தோலுக்குத் தேவையா உணவைத் தந்து பளிச்சிடச் செய்கிறது. தனியாகவோ முக பேக்குகளில் கலந்தோ உபயோகிக்கலம். எண்ணெய்ப் பசைத்தோல் உள்ளவர்கள் மட்டும் தவிர்க்கவும்.

எலுமிச்சை
முகத்தை சுத்தப்படுத்தவும் பளீச் செய்து நிறம் மேம்படவும் உதவும். வியர்வை துளைகளை மூடச் செய்து முகத்தை இறுக்கிறது. முக பேக் குகளில் உபயோகிக்கலாம்.

மருதாணி
முடிக்கு நல்ல கண்டிஷனர். முட்டையுடன் சேர்த்தோ தனியாகவோ தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம். டீ டிக்காக்ஷன் சேர்த்தல் நரைமுடிக்கு கலர் கிடைக்கும்.

புதினா
பருக்களின் எதிரி. அரைத்து பற்றுபோட்டால் பரு போய்விடும். தண்ணீரில் சிறிது புதினா இலைகளை நசுக்கிப் போட்டு குளித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

அரிசி
சோப்புப் போட்டு போகாத அழுக்குகள், மூக்கு நுனியிலும், மூக்கின் ஓரங்களிலும் தேங்கி நின்றுவிடும். பால் கலந்த அரிசி மாவு கொண்டு ஸ்கிரப் போல தேய்த்தால் அழுக்குகள் எல்லாம் காணாமல் போய்விடும்.



சோயா
சோயா மாவில் பாலும் சில துளிகள் தேனும் கலந்து பேஸ்ட் தயாரித்து முகத்துக்கு பேக் போட்டுக் கொண்டால் டானிக் சாப்பிட்டதுபோல் தோல் பளிச்சென்று புத்துணர்ச்சி பெறும்.

கோதுமைத் தவிடு
கோதுமைத் தவிட்டைப் பாலில் சிறிது நேரம் ஊற வைத்து பேக்காக போடலாம். முக்கால் பதம் காய்ந்த பின் விரல் நுனிகளால் தேய்த்தால் முக அழுக்குகள் எல்லாம் வந்துவிடும். முகத்தை பட்டுப்போல் மென்மையாக்கும் ரகசியம் இந்த தவிட்டில் இருக்கிறது.

வாழைப்பழம்
தோலுக்குச் சிறந்த உணவு கனிந்த வாழைப் பழத்தை மசித்து பேக்காக போட்டுக் கொள்ளலாம்.

பிரட்
பிரட் துண்டுகளை பாலில் ஊற வைத்து முகத்தின் அழுக்கை நீக்கும் ஸ்கிரப்பாக உபயோகிக்கலாம். முகத்தை மென்மையாக மாற்றவும் இது உதவுகிறது.

பாலேடு
உதடுகளை வெடிப்புகள் இன்றி மென்மையாக வைத்திருக்கவும், கறுத்த உதடுகளை மீண்டும் இயற்கையான நிறத்துக்கு கொண்டு வரவும் தினசரி உதடுகளில் பாலேடு தடவினாலே போதும். வறண்ட தோல் உடையவர்களுக்கும் £லேடு ஒரு வரம். பாலேட்டை வெறுமனேயும், தேவையானவற்றில் கலந்தும் பேக் காக உபயோகிக்கலாம்.

கடலை மாவு
அழுக்கு நீங்கி தோல் மினுமினுக்க கடலைமாவை ஸ்கிரப்பாக உபயோகிக்கலாம். முகத்தில் வழியும் அதிகமான எண்ணெய்ப் பசையைப் போக்கும். தோலுக்குத் தேவையான புரதச்சத்துத் தரவல்லது. பாலேடு கலந்து பேக்காகப் போட்டால் முகத்தின் தசைகளை இறுக்கி இளமையைத் தக்கவைக்கும்.

காரட்
விட்டமின் ஏ சத்து கொட்டிக் கிடக்கும் புதையல் கிடங்கு. மசித்து அப்படியே பேக் போடலாம். அல்லது சாறு எடுத்து அதை பேக்களில் கலந்து பயன்படுத்தலாம்.

வெள்ளரி
எண்ணெய் பசைச் சருமம் உள்ளவர்களுக்கு மிக நல்லது. முகத்துக்கு நல்ல குளிச்சியும் புத்துணர்ச்சியும் தரவல்லது.

பப்பாளி
அனைத்து பழவகைகளிலும் தோலுக்கு மிக முக்கியத் தேவையான ஆல்ஃபா ஹைடராக்ஸி ஆஸிட்ஸ் (கிபிகிஷி) இருக்கிறது. தோலில் தங்கிவிடும். இறந்த செல்களை வெளியேற்றி தோலை மென்மையப்படுத்தவும், தோலின் ஈரப்பதத்தை காப்பாற்றவும். தோலை இறுக்கத்துடன் வைத்திருக்கவும் இது உதவுகிறது. முகத்தின் மெல்லிய சுருக்கங்களைப் போக்குகிறது. இளமையைக் காப்பாற்றும் இந்த ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் பப்பாளியை மசித்து ஒன்றிரண்டு சொட்டுக்கள் தேன் கலந்து முகத்தை மசாஜ் செய்யலாம். பேக்காகவும் உபயோகிக்கலாம்.

ஆப்பிள்
எண்ணெய்ப் பசையுள்ள சருமத்துக்கு மிக நல்லது. சிப்ஸுக்கு உருளையை சீவுவதுபோல் ஆப்பிளை நீளவாக்கில் மிக மெல்லியதாக சீவி, முகத்தில் இடைவெளி இன்றி பரப்பிவிடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொண்டால் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளபளக்கும். ஆப்பிளை மசித்துப் போடலாம். தோலுக்குத் தேவையான சத்துக்களும் இதில் மிகுந்துள்ளன.

திராட்சை
முகத்தை ப்ளீச் செய்து பளீர் நிறம் தருவதற்கு உதவும் திராட்சை ஜூஸை முல்தானி மெட்டி கலந்து பேக் போடலாம். எண்ணெய்ப் பசையுள்ளவர்களுக்கு மிக நல்லது.

தர்பூஸ் பழம்
வறண்ட தோல் உடையவர்கள் முகத்தை சுத்தப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தர்பூஸ் வில்லைகளை முகத்தில் படரவிட்டு சுற்று நேரம் படுத்துக் கொள்ளாம்.

ஆலிவ் எண்ணெய்
வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிக நல்லது. குளிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன் முகத்திலும், கை, கால்களிலும் ஆலிவ் ஆயில் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் தோல் மென்மையாவது மட்டுமல்ல, கலரும் கொடுக்கும். முகத்தை மசாஜ் பண்ணுவதற்கும் ஆலிவ் ஆயிலை உபயோகிக்கலாம். தோலுக்குத் தேவையான சத்துகளும் இதில் இருக்கின்றன.

பாதாம் பருப்பு
முகத்தை இளமையுடன் வைத்திருக்க உதவும். விட்டமின் ஈ சத்து நிறைந்தது. ஒரு பாதாம் பருப்பை (பால் சேர்த்து) மஞ்சள் கிழங்கு போல் உரசி முகத்தில் தேய்த்து காய்ந்தபின் கழுவிக் கொள்ளலாம். குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்களுக்கு மக நல்லது. வறண்ட கூந்தல் உடையவர்கள் பாதாம் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி மயிர்க்கால்களில் படும்படி தேய்த்துக் குளித்தால் முடிப் பளபளக்கும்.

ஆரஞ்சுப் பழம்
விட்டமின் சி சத்து கொண்டது. இதன் சாற்றை எடுத்து முல்தானி மெட்டி கலந்து பேக்காக உபயோகித்தால் முகம் பொலிவுறும். ஆரஞ்சுப் பழத்தின் தோலை காயவைத்து பவுடர் செய்து பேக்குகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

லிச்சி எனப்படும் மங்குஸ்தான் பழம்
வெளியே கறுப்பாக இருக்கும் பகுதியைத் தவிர்க்கவும். உள்ளே கூழ்போல இருக்கும் பகுதியை எடுத்துத் தடவி வந்தால் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
ஆப்ரிகாட் பழத்தை மசித்துக்கொண்டு கால் ஸ்பூன் பாதாம் எண்ணெயும், இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் எலுமிச்சை ஜூஸும் கலந்து தடவலாம்.
இதுவும் முக சுருக்கத்தைப் போக்கும் அற்புதமான பேக் குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிக நல்லது.
பார்லி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் காரட் ஜூஸும், ஐந்து சொட்டுகள் தேனும் கலந்து தடவலாம். தோலுக்குத் தேவையான உணவையும் ஈரப்பதத்தையும் தரும் பேக் இது.
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் புரூவர்ஸ் (ஙிக்ஷீமீஷ்மீக்ஷீs) எனப்படும் ஈஸ்ட் மாத்திரைகள் கிடைக்கும். அதை வாங்கி வந்து பவுடராக்கிக் கொண்டு முட்டை விழுந்து வறண்ட தோல் உடைய பெண்களுக்கு மிக பயனுள்ள பேக் இது.
புருவர்ஸ் ஈஸ்ட் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், 4 சொட்டு எலுமிச்சை ஜூஸ், ஒரு டீஸ்பூன் காரட் ஜூஸ் கலந்து போடலாம். வறண்ட தோல் உடையவர்கள் எனில் மேலே சொன்னவற்றுடன் கொஞ்சம் தயிரும், தேனும் கலந்து உபயோகிக்கலாம்.
டூவிலரில் பயணிக்கும் பெண்களுக்கும், அதிகம் வெளியே அலைய வேண்டியவர்களுக்கும் இந்த பேக் தேவையான ஒன்று.
வெறும் காரட்டை மட்டுமே வேகவைத்து மசித்து அரை டீஸ்பூன் தேன் சேர்த்தும் பேக் தயாரிக்கலாம். பழங்களையும்கூட மசித்து எதுவுமே சேர்க்காமல் தனி பேக்காகப் போடலாம்.
தனியாக முட்டை பேக் போடலாம். முட்டையோடு 5 சொட்டு தேன் கலந்தும் போடலாம்.
வறண்ட சருமம் உடையவர்கள் எந்த பேக் ஆனாலும் முல்தானிமெட்டியைக் குறைத்துக் கொண்டு தேன், தயிர் ஆகிய இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சாதம் வடித்த கஞ்சியுடன் பால் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
தடிமனான செயின் அணிவதாலும், கவரிங் செயின் அணிவதாலும் கழுத்து கறுப்பாகி விடுகிறது. சுத்திகரிக்கப்பட்ட களிமண் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் தலா ஒரு ஸ்பூன் வெள்ளரிச்சாறு, கற்றாழைச் சாறு, இளநீர் ஆகியவற்றைக் கலந்து கழுத்துப் பகுதியில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்துக் கழுவிவிடவு இது போல் தொடர்ந்து செய்தால் கழுத்தின் கருமை நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum