தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

Go down

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?  Empty கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

Post  meenu Tue Feb 26, 2013 4:38 pm

கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயால் (Cervical Cancer) இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது.

உலகளவில் வளரும் நாடுகளில் இந்த புற்றுநோய் ஏற்படும் சுமார் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான வளரும் நாடுகளில் புற்றுநோயால் பெண்கள் உயிரிழப்பு என்றாலே அது கர்ப்ப வாய் புற்றுநோயாகத்தான் உள்ளது.

நோய்த்தடுப்பு, குறிப்பிட்ட இடைவெளியில் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்யத் தவறும் பெண்கள், இந்த வகை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 2-வது இடத்தைப் பிடிக்கிறது. இந்த புற்று நோய் துவக்கத்தில் அறிகுறிகள் ஏதுமின்றி காணப்படும். இதுவே அதிக எண்ணிக்கையில் பெண்கள் உயிரிழப்பதற்கு காரணமாகி விடுகிறது.

உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாவதாக தெரிய வந்துள்ளது.

உரிய நேரத்தில் இந்த புற்றுநோய் கண்டறியப்படா விட்டால், பெண்கள் கருத்தரித்தல் இயலாமல் போய் விடும். ஆரம்ப நிலையிலேயே இந்நோயைக் கண்டுபிடித்தால், சிகிச்சை அளிப்பது எளிது. குணப்படுத்தி விடலாம். சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண் குழந்தைப் பேறு பெற முடியும்.

எந்த புற்றுநோயானாலும், அந்நோய் பரவாமல் தடுப்பதற்கு சிகிச்சை அளிக்கப்படும்.

அதேநேரத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த நோயின் பாதிப்பால் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடும்.

எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுதல், புகைப்பழக்கம் உடையோர், பால்வினை நோய் இருப்பவர்களுக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum