தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைட்டமின் டி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோய்

Go down

வைட்டமின் டி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோய்  Empty வைட்டமின் டி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோய்

Post  meenu Tue Feb 26, 2013 1:00 pm

பிறந்த குழந்தைகளுக்கு
வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால் பின்னாளில் மனச்சிதைவு நோய் ஏற்பட
வாய்ப்பு உள்ளது என்று குவீன்ஸ்லாந்து பல்கலை. மூளை ஆய்வு நிறுவனம்
தெரிவித்துள்ளது.


அதாவது
நம் காதுகளில் மர்மக்குரல்களும், காட்சித் திரிபுகளும் சம்பந்தமே இல்லாத
பிரம்மைகளும் தோன்றுவது ஷிசோஃப்ரேனியா என்ற மனச்சிதைவு நோயின் அறிகுறிகள்
ஆகும்.


மேலும் மூளையில் லிதியம் என்ற ரசாயனத்தின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் இந்த மனச்சிதைவு நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால்
பெரும்பாலும் இந்த மனச்சிதைவு நோய் சமூக, குடும்ப அமைப்புகள் காரணமாகவே
எழுகிறது என்று சமூக உளவியலாளர்கள் பலரும் கூறிவருகின்றனர்.


இந்த
நிலையில் குவீன்ஸ்லாந்து பல்கலை.யின் மூளை ஆய்வு நிறுவனம் பிறக்கும் போது
வைட்டமின் டி சத்து அளவுகுறைவாக இருந்தால் வளர்ந்த பிறகு மனச்சிதைவு நோய்
ஏற்படும் என்று ஆய்வு ரீதியாக கண்டதாக தெரிவித்துள்ளனர்.


டென்மார்க்கில்
பிறந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பின்பு அதனை மனச்சிதைவுக்கு
ஆளான பெரியோர்களின் ரத்த மாதிரியுடன் ஒப்பிட்டனர்.


இதனால் வைட்டமின் - டி சத்து குறைவால் மனச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

நம்
உடலில் சூரிய ஒளி படுவதன் மூலம் உருவாவது வைட்டமின் டி ஆகும். இது பொதுவாக
ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியமானது என்றுதான் ஆய்வுகள் கூறிவந்தன.


தற்போது குவீன்ஸ்லாந்து ஆவினர் தெரிவ்த்திருப்பதன்படி வைட்டமின் டி ஆரோக்கியமான மூளைக்கும் அவசியமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்
கருத்தரித்திருக்கும் போதே பெண்களுக்கு வைட்டமின் டி சத்துகளை கூடுதலாக
அளிக்கலாம் என்றும் இந்த மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  வைட்டமின் டி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோய்
» குழந்தைகளுக்கு அடிக்கடி என்னென்ன நோய் வருன்னு தெரிஞ்சுக்கோங்க...
» புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!
» குழந்தைகளுக்கு இருதய நோய் : கண்டுபிடிப்பது எப்படி?
» பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum