தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடலை ஆரோ‌க்‌கியமா‌க்கு‌ம் வை‌ட்ட‌மி‌ன்க‌ள்

Go down

உடலை ஆரோ‌க்‌கியமா‌க்கு‌ம் வை‌ட்ட‌மி‌ன்க‌ள்  Empty உடலை ஆரோ‌க்‌கியமா‌க்கு‌ம் வை‌ட்ட‌மி‌ன்க‌ள்

Post  meenu Mon Feb 25, 2013 12:42 pm

நா‌ம் பெரு‌ம்பாலு‌ம் எ‌ப்போது வை‌ட்ட‌மி‌ன்க‌ள் ப‌ற்‌றி பேசுவோ‌ம் எ‌ன்றா‌ல், நமது உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஆரோ‌க்‌கிய‌க் குறைவு ஏ‌ற்ப‌ட‌்டு, மரு‌த்துவ‌ர் செ‌ய்யு‌ம் சோதனை‌‌யி‌ல் இ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் குறைவாக இரு‌க்‌கிறது எ‌ன்று தெ‌ரி‌ந்த ‌பி‌ன்தா‌ன் நா‌ம் அ‌ந்த வை‌ட்ட‌மி‌ன் ப‌ற்‌றி அ‌க்கறை கொ‌ள்வோ‌ம்.

ஆனா‌ல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். வை‌ட்ட‌மி‌ன் குறை‌வினா‌ல் நோ‌ய்களு‌ம் உ‌ண்டாகு‌ம்.

எனவே, நா‌ம் ‌சில அ‌றிகு‌றிகளை வை‌த்தே எ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் ந‌மது உட‌லி‌ல் குறை‌கிறது, அ‌ந்த வை‌ட்ட‌மினை‌ப் பெற எ‌ந்த ‌விதமான உணவு உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று மு‌ன்கூ‌ட்டியே அ‌றி‌ந்து கொ‌‌ண்டா‌ல் பல நோ‌ய்க‌‌ளி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்கலா‌ம்.

வைட்டமின் `ஏ' : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் `பி' : இது குறைந்தால் வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி' : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி' : வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக் கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது. அ‌திகாலை 7 ம‌ணி வெ‌யி‌‌லி‌ல் நா‌ம் ‌நி‌ன்றா‌ல் சரும‌ம் வை‌ட்ட‌மி‌ன் டியை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம்.

வைட்டமின் `ஈ' : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையும் உண்டாகும். நீண்ட நாளைய தோள்பட்டை வலி ஆகியவற்றிற்கும் வைட்டமின் ஈ உதவும்.

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum