தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எப்படி வேண்டுமானாலும் கூந்தலை அழகாக்கலாம்

Go down

எப்படி வேண்டுமானாலும் கூந்தலை அழகாக்கலாம் Empty எப்படி வேண்டுமானாலும் கூந்தலை அழகாக்கலாம்

Post  ishwarya Fri Feb 22, 2013 3:06 pm

‘‘சினிமா நடிகைகளுக்கும், மாடல்களுக்கும் மட்டும் எப்படித்தான் கூந்தல் அவ்ளோ அழகா இருக்கோ... நமக்கு தேங்காய் நார் மாதிரி, முரட்டுத்தனமா அடங்க மாட்டேங்குதே...’’ என்ற புலம்பலை இன்றைய இளைய தலைமுறைப் பெண்கள் பலரிடமும் கேட்கலாம்.

‘‘சொன்னபடி கேட்டு, மக்கர் பண்ணாத கூந்தல் நடிகைகளுக்கு மட்டுமில்லீங்க... உங்களுக்கும் சாத்தியம்தான்’’ என்கிறார் அழகுக் கலை நிபுணர் மேனகா. அதற்கு அவர் சொல்கிற டிப்ஸ் இங்கே...

‘‘தலை நிறைய எண்ணெய் வச்சு, படிய சீவினாதான் பலருக்கும் முடி அடங்கும். ஆனா, எண்ணெய் வைக்கிறதை இந்தக் காலத்துல யாரும் விரும்பறதில்லை. நம்ம விருப்பப்படி எப்படி வேணா கூந்தலை மாத்த, இன்னிக்கு நிறைய ஸ்டைலிங் பிராடக்ட்ஸ் இருக்கு. ஆனா, பலருக்கும் அதை உபயோகிக்க பயம். நம்ம கூந்தலுக்கேத்ததை, தரமான பொருளா இருந்தா பயப்படாம உபயோகிக்கலாம்’’ என்கிற மேனகா, என்னென்ன ஸ்டைலிங் பொருள்களை, எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பட்டியலிடுகிறார்.

ஜெல்

ஈரமான, ஈரமில்லாத கூந்தல்ல தடவலாம். ஆண், பெண் யார் வேணா உபயோகிக்கலாம். இதைத் தடவ ஒரே ஒரு நிமிஷம்தான் எடுக்கும். ரொம்ப குட்டையான கூந்தல் உள்ளவங்களுக்கு ஏற்றது இது. மண்டைப் பகுதில படாம, வெறும் கூந்தல்ல மட்டுந்தான் தடவணும். பார்ட்டி மாதிரி இடங்களுக்குப் போகறப்ப, பளபளா எஃபெக்ட் கொடுக்கற கிளிட்டரிங் ஜெல் கூட கிடைக்குது. ஜெல் உபயோகிச்சா, அன்னிக்கே கூந்தலை அலச வேண்டியது அவசியம்.

ரொம்ப சுருட்டையா, முரட்டுத்தனமா இருக்கிற முடிக்கு பொருத்தமானது இது. சினிமா நடிகைங்களோட முடியெல்லாம் பட்டு மாதிரி மிருதுவா, பளபளப்பா இருக்கக் காரணம் இந்த சீரம்தான். இதுல வெறும் 2 சொட்டு மட்டும் எடுத்து, முடியோட வேர்க்கால்கள்ல படாம, மத்த இடங்கள்ல பரவலா தடவணும். ரொம்ப
வறட்சியான முடியை மிருதுவா மாத்தும். தடவினதும் முடி அப்படியே பட்டு மாதிரி பறக்கும், பளபளக்கும். வேலைக்குப் போறவங்க தினமும் உபயோகிக்கலாம். பக்க விளைவுகளே இருக்காது.

ரடஸ்ட் இட் ர

பேருக்கேத்தபடி தூசு மாதிரியே இருக்கிற இந்தப் பொருள், முன்னந்தலைல முடி கொட்டினவங்களுக்கான வரப்பிரசாதம். சில பேருக்கு ஒரே மாதிரி வகிடு எடுத்ததாலயோ, வருஷக் கணக்கா ஒரே மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணினதாலயோ முடி கொட்டிருக்கும். பார்க்க அசிங்கமா இருக்கிற இதை ‘டஸ்ட் இட்’ மூலமா மறைக்கலாம். கருப்பு, பிரவுன் மாதிரி நிறைய கலர்ல கிடைக்கிற இதை முடி கொட்டின இடத்துல உபயோகிச்சா, முடி உதிர்ந்ததே தெரியாம, அந்த இடம் அழகா மாறிடும். பிசுபிசுப்போ, அரிப்போ இருக்காது. எவ்ளோ பக்கத்துல வந்து பார்த்தாலும் வித்தியாசம் கண்டுபிடிக்க
முடியாது.

அப்லோட் ர

அடர்த்தி கம்மியான கூந்தலை, அடர்த்தியா காட்டற பொருள் இது. ஈரமான முடில, கூந்தலோட அடிபாகத்துல தடவினா, அடர்த்தியா காட்டும்.

ஸ்பிரே ர

அடங்க மறுக்கற கூந்தலுக்கானது ஸ்பிரே. எவ்ளோ மோசமான கூந்தலையும், ஸ்பிரே மூலமா கட்டுப்படுத்தலாம். அந்த இடத்தை விட்டு நகராது. ஷாம்பு போட்டுக் குளிச்சாதான் மாத்த முடியும். இப்பல்லாம் வெறும் பளபளப்புக்கான ஸ்பிரே, விதம் விதமான கலர் ஸ்பிரேனு நிறைய கிடைக்குது.

மெஸ் அப்

கலைஞ்ச மாதிரி தோற்றம் தரக்கூடிய கூந்தல்தான் இப்ப இளைஞர்கள் மத்தில பிரபலம். அதுக்கானதுதான் இந்த மெஸ் அப். பார்க்கிறதுக்கு கம் மாதிரியே இருக்கும். அதை அப்படியே தலைல தடவிக்க வேண்டியதுதான். ஸ்டைல் பண்ணின மாதிரியும் இருக்கும், அதே சமயம் கலைச்சு விட்ட மாதிரியும் தெரியும். பசங்களுக்குப் பிடிச்சது.
ஸ்டைலிங் பொருள்களை உபயோகிக்கிறப்ப, முடியோட வேர்ல படாமப் பார்த்துக்கணும். விலை அதிகம்னாலும், தரமான பொருள்கள்தான் பாதுகாப்பு. கூடிய வரைக்கும் அன்னன்னிக்கு கூந்தலை அலசி, சுத்தமா வச்சுக்கிறது, கூந்தலோட ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்’’ என்கிறார் மேனகா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum