தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம்

Go down

கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் Empty கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம்

Post  meenu Mon Jan 14, 2013 2:28 pm

நவக்கிரகங்களில் ஆறாவது கிரகமாக விளங்குபவர் சுக்ர பகவான்.சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவருக்கும் கியாதி என்ற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர். தேவகுருவான பிரகஸ்பதிக்கு நிகராக சகல கலைகளிலும், சாஸ்திரங்களிலும் வல்லவர். சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து "மிருத சஞ்சீவினி" வரத்தை பெற்றவர். இறைவன் அக்னீஸ்வரர். தாயார் கற்பகாம்பிகை. இங்கு சுக்ரபகவானுக்கு தனி சன்னதி கிடையாது.

பரிகாரம்:

அக்னீஸ்வரருக்கு வெண்பட்டு சாற்றி வெண்தாமரையால் பூஜித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு கோவிலுக்கு வெளியே உள்ள 9 ஏழைகளுக்கு அன்னதானம் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் திருமணம் விரைவில் கூடிவரும்.

ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கு நோக்கி இருக்கிறது. உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் காசி விஸ்வநாதர், விசாலாட்சியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது அன்னை கற்பகாம்பிகையின் ஆலயம்.

அடுத்தது இறைவன் அக்னீச்வரரின் ஆலயம். இரண்டுமே கிழக்கு நோக்கி தான் உள்ளன.மேற்கு பக்கமாக நந்தி மற்றும் நடராஜர்,நவக்கிரக பீடம்,சனி பகவான் ஆகியோர் உள்ளனர்.இத்தலத்தில் முன்று இடங்களில் முன்று சனீஸ்வரர் திருஉருவச் சிலைகள் இருப்பதும் விசேஷம்.

நடை திறக்கும் நேரம் :

காலை 8 மணி முதல் - 12 வரை
மாலை 4 மணி முதல் - 8.00 வரை

போக்குவரத்து வசதி:

கும்பகோணத்திற்கு அருகே 12 கி.மீ தொலைவில் சூரியனார் கோவில் உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. அல்லது கும்பகோணம் சென்று பின் கும்பகோணத்திலிருந்து 2A, 2B, 38, 54 போன்ற நகர பேருந்துகள் கஞ்சனூர் செல்லும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum