தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வித்தியாசமான தோற்றங்களில் முருகன்

Go down

வித்தியாசமான தோற்றங்களில் முருகன் Empty வித்தியாசமான தோற்றங்களில் முருகன்

Post  meenu Mon Jan 14, 2013 2:16 pm

தந்தைக்கு மந்திரம் உபதேசித்த முருகன் திருப்பெயர்கள் எண்ணிடலங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புடையது. இளமை மாறாமல் பால முருகனாக இருக்கும் முருகனது வித்தியாசமான காட்சிகளை இங்குக் காணலாம்.

சங்கு சக்கர முருகன்.........

திருமால் தான் சங்கு சக்கரத்துடன் காட்சி தருவார். திருமாலின் மருமகன் முருகனும் தன் மாமனைப் போல் சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அரிய காட்சியை கும்பகோணத்திற்கு அருகே உள்ள அழகாபுத்தூரில் காணலாம்.

சதுர்முக முருகன்.............

முருகனுக்கு ஆறுமுகம் என்பது நமக்குத் தெரியும். சில தலங்களில் ஒரு முகத்துடன் காட்சி தருவார். ஆனால் சதுர்முக முருகனாக நான்கு முகத்துடன் சின்னாளபட்டி, திண்டுக்கல் தலங்களில் காணலாம்.

மாம்பழ முருகன்...........

மாம்பழத்துக்காக கோபப்பட்டு முருகன் ஆண்டிக் கோலத்தில் அமர்ந்த இடம் பழனி. ஆனால் முருகன் கையில் மாம்பழத்துடன் இருக்கும் காட்சியை திருநள்ளாறு தர்ப்பாரண்யேச்வரர் கோவிலில் காணலாம்.

முருகனை இடுப்பில் ஏந்திய அம்மன்.........

மயிலாடுமுறை-திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் முருகனை கைக்குழந்தையாக அம்மன் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம்.

மூன்று கண் முருகன்..........

திருநனிப்பள்ளி மற்றும் திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகன் மூன்று கண்களுடன் எட்டு கைகளுடனும் காட்சி தருகிறார்.

பிற வாகனங்களில் முருகன்..........

முருகனுக்கு வாகனம் மயில் என்பது தெரியும். மயில் தவிர பிற வாகனங்களில் முருகன் பவனி வரும் காட்சியை நாம் பின்வரும் தலங்களில் காணலாம்.
யானை-திருப்போரூர், சுவாமிமலை, திருத்தணி, பிரான்மலை, உத்திரமேரூர். ஆடு- திருமலைக்கோவில் மருங்கூர்.
நாகம்- சுப்பிரமண்யா, மேற்கு மாம்பலம்.
மீன்- காங்கேயம்

வில்லுடன் முருகன்..........

திருவிடைக்கழி (மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலை), வில்லுமையான்பட்டு, சாயக்காடு, விளநகர், அனந்தமங்கலம், திருமயிலாடி ஆகிய ஊர்களில் முருகன் ஒரு கையில் வில்லுடனும் மற்றொரு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.

சேவல் ஏந்திய முருகன்.........

கோவை அருகே உள்ள செஞ்சேரிமலையில் முருகன் சேவல்கொடிக்குப் பதிலாக சேவலையே ஏந்தியுள்ளார். முருகன் கிளி ஏந்திய காட்சியை கனககிரியில் உள்ள முருகன் கோவிலில் காணலாம்.

ஒரே கல்லில் முருகன், வள்ளி, தெய்வானை...........

திருநெல்வேலி அருகே உள்ள குறுக்குத் துறையில் ஒரே கல்லில் முருகன், வள்ளி, தெய்வானை சிலை வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள்.

சென்னிமலை முருகன்...........

சென்னிமலையில் சன்னதிக்கு எதிரில் காகங்கள் வருவதில்லையாம். முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும். தயிர் புளிப்பதில்லையாம். இங்குள்ள மற்றொரு முருகனுக்கு இரண்டு முகங்களும் எட்டுக்கரங்களும் உள்ளது.

பிரணவ உபதேச காட்சி........

முருகன் தன் தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து பாலகுருநாதனாக உள்ள இடம் சுவாமி மலை. ஆனால் சுவாமிமலையில் உபதேசக் காட்சி சிலை வடிவில் இல்லை. (கதை வடிவமாக உள்ளது). ஆனால் திருப்போரூரில் ஐம்பொன் சிலையாக பிரணவம் உபதேசிக்கும் காட்சி உள்ளது.

ஒரு முகமும் ஆறு கரங்களும்.........

ஒரு முகத்துடனும் ஆறு திருக்கரங்களுடனும் அறையணி நல்லூர், கழுகுமலை, கோடிக்கரை, அழகர் கோவில் முருகன் தலங்களில் காட்சி தருகிறார்.

தியானக் கோலத்தில் திருமுருகன்.........

திருச்செந்தூரில் முருகப் பெருமான் தியானக் கோலத்தில் காட்சி தருகிறார்.

முருகன் சிவபூஜை செய்த தலங்கள்..........

1. திருச்செந்தூர்,
2. திருமுருகன்பூண்டி,
3. திருச்செய்ஞலூர்.

தாமரை ஏந்திய முருகன்...........

தாமரை ஏந்திய முருகனை ஆவூரில் தரிசிக்கலாம்.

திருமலைக்கேணி முருகன்..........

திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணி என்னும் ஊரில் உள்ள முருகன் கோவிலில் வள்ளி சுனை, தெய்வானை சுனை என்னும் சுனைகள் அருகருகே உள்ளன. தெய்வானை சுனையின் நீர் இரவு பகல் எந்த நேரமும் குளிர்ந்த நீராகவும் வள்ளி சுனையின் நீர் இரவு பகல் எந்த நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

பாம்பு வடிவத்தில் முருகன்..........

பாம்பு வடிவத்தில் முருகன் காட்சி தரும் கோவில் கர்நாடகத்தில் `காட்டி சுப்பிரமணியா' எனும் இடத்தில் உள்ளது. இங்குள்ள பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. அதுபோல யாரும் பாம்பை அடிப்பதில்லை.

ஒற்றைக் கண்ணூர் முருகன்..........

மிகவும் பழமையான முருகன் கோவில் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணூர் ஆகும். இங்கு முருகன் ஒரு கரத்தில் ஜபமாலையுடனும் மறுகரத்தில் சின்முத்திரையுடனும் காட்சி தருகிறார். இங்கு முருகனுக்கு வாகனம் யானை.

குன்றத்தூர் முருகன்...........

தென்தணிகை எனப்போற்றப்படும் குன்றத்தூரில் முருகனையும் வள்ளி தெய்வானையையும் ஒரே நேரத்தில் காண முடியாது. காரணம் கருவறையின் அமைப்பு அப்படி ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் வள்ளியுடனும், மறுபக்கத்தில் இருந்து பார்த்தால் தெய்வானையுடனும் முருகனை தெரிவார்.

பாதரட்சையுடன் முருகன்.............

கும்பகோணத்தில் உள்ள `வியாழ சோமநாதர்' ஆலயத்தில் முருகப்பெருமான் காலில் பாதரட்சையுடன் காட்சி தருகிறார். மயில் மீது அமர்ந்துள்ள முருகனின் அருகில் வள்ளி தெய்வானை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள்.

திருப்போரூர் முருகன்..................

திருப்போரூரில் முருகன் வள்ளி தெய்வானையுடன் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவருக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. மூலவருக்கு திருவடியின் கீழ் உள்ள முருகன் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சிலைக்குத்தான் அபிஷேகம் செய்யப்படுகிறது.

தினமும் தேனாபிஷேகம்...........

காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்ட குமரனுக்கு தினமும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி தினத்தன்று எண்ணெய் காப்பு செய்யப்படுகிறது. இந்த முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திக்கு நாகம் குடை பிடிக்கிறது. முருகனுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறார்கள். இவரை கல்யாண சுந்தரர் என்று அழைக்கிறார்கள்.

மயிலின் மீது நிற்கும் முருகன்...........

திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியின் உற்சவ விக்கிரகம் வித்தியாசமான அமைப்புடையது. முருகன் போருக்குப் புறப்படுகிறார். இடது காலை கீழே ஊன்றி வலது காலை மயிலின் மீது வைத்து இடது கரத்தில் வில்லும் வலது முன் கரத்தில் அம்பும் வைத்து போருக்குப் புறப்படும் நிலையில் இருக்கிறார். வேலூரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் படவேட்டுக்கு அருகில் உள்ள குமரன் குன்றிலும் முருகப் பெருமான் மயில் மீது நின்று கொண்டிருக்கிறார்.

வேடர் வேடத்தில் வேலன்.........

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சியில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். வள்ளியை மணம் செய்ய வேடன் வேடம் பூண்டவன் முருகன். இந்த வேடர் வடிவ முருகனுக்கு வியர்வை வருவது வியப்பான செய்தியாகும்.

சிக்கல் முருகன்..............

கந்தசஷ்டி திருநாளில் தாயிடம் முருகன் வேல் வாங்கும் முருகனுக்கு வியர்வை வழியும். அதை துணியால் துடைத்தாலும் வற்றாமல் வியர்வை வழியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum