தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண தடை, வீண் வழக்குகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷம் நீங்க என்ன பரிகாரம்?

Go down

 திருமண தடை, வீண் வழக்குகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷம் நீங்க என்ன பரிகாரம்? Empty திருமண தடை, வீண் வழக்குகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷம் நீங்க என்ன பரிகாரம்?

Post  ishwarya Sat Feb 16, 2013 6:00 pm

ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என ராகு, கேதுவை குறிப்பிடுவார்கள். ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைப்படி பலன்களை ராகு வழங்குவார் என்பது சாஸ்திர விதியாகும். யோகமானாலும் சரி, தோஷமானாலும் சரி. இரண்டையுமே அளவுக்கு அதிகமாக வாரி வழங்கக் கூடியவர். ராகுவை யோக காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் புகழ்கின்றது. லக்னத்துக்கு 3, 6, 11 ல் இடம் பெறும் ராகுவால் அவரின் திசா புக்திகளில் பெரிய ராஜயோக பலன்கள் ஏற்படுகிறது. அதேபோல் யோகத்தை தரக்கூடிய கிரகங்களுடன் சேரும்போதும் சுபபலன்களை தருகிறது.

ராகுவால் ஏற்படும் தோஷங்கள்: ராகுவால் ஏற்படும் தோஷங்களில் திருமணத் தடை முக்கியமானது. லக்னத்துக்கு ஏழில் உள்ள ராகு திருமணத் தடைகளை ஏற்படுத்துவார். லக்னத்துக்கு இரண்டு, எட்டில் உள்ள ராகு வீண் வழக்குகள், வம்புகள், குடும்ப தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றை தருவார். ஐந்தாம் இடத்தில் உள்ள ராகு குழந்தை பாக்கிய தடையை உண்டாக்குவார். புத்திரன், புத்திரிகளால் மனஉளைச்சல், அவமானம் போன்ற பலன்களை கொடுப்பார்.

பரிகாரங்கள்

சுக்கிர வார ராகு கால விரதம்: ராகுவால் ஏற்படும் திருமண தோஷங்கள் நீங்க, 11 வாரங்கள் வெள்ளிக்கிழமைதோறும் ராகு காலத்தில் அமிர்த கடிகையில் அதாவது 11.30 முதல் 12.00 மணிக்குள் துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். கடைசி வாரம் அதாவது பதினொன்றாவது வாரம். துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்து மஞ்சள், பூ, தாலி கயிறு, வெற்றிலை பாக்கு, பழவகைகள், முழுத்தேங்காய், சர்க்கரைப் பொங்கல் வைத்து உங்களால் எத்தனை சுமங்கலிகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு தரலாம்.

பஞ்சமி திதி: ராகு பரிகாரத்துக்கு மிகவும் சிறப்பான திதியாக பஞ்சமி திதி சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் ஸ்தலத்துக்கு சென்று புற்றுக்கு முன்பு பால் வைத்து வழிபட வேண்டும். அம்மனுக்கு நட்சத்திரம், பெயர் சொல்லி அர்ச்சனை செய்து வெளியில் வரும்போது விநாயகரை வணங்கி 4 தேங்காய் உடைக்க வேண்டும். உளுந்து வடை செய்து விநியோகம் செய்ய வேண்டும்.

மங்கள வார ராகு கால விரதம்: இந்த விரதத்தை செவ்வாயுடன் - ராகு சேர்ந்துள்ள ஜாதகர்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அமிர்த கடிகை நேரமான 4.00 முதல் 4.30 மணிக்குள் துர்க்கைக்கு சிகப்பு புடவை சாற்றி எலுமிச்சம்பழ மாலை போட்டு வணங்க வேண்டும். எலுமிச்சம் சாதம், நற்சீரக பானகம் விநியோகம் செய்ய வேண்டும்.

பைரவர் வழிபாடு: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சர்வதோஷ நிவாரணம் உண்டு. வெள்ளிக் கம்பியில் உளுந்து வடை மாலை கோர்த்து பைரவருக்கு அணிவிக்கலாம்.

திருவாதிரை வழிபாடு: ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ஸ்ரீராமானுஜரை வழிபட்டால் சகல தடைகள் நீங்கி நல்வழி பிறக்கும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரையும் தரிசிக்கலாம்.

குருவார விரதம்: வியாழக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு, மஞ்சள் நிற புடவை சாற்றி அர்ச்சனை, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் கடுமையான தோஷங்கள் அகலும்.
- ஜோதிட முரசு
மிதுனம் செல்வம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum