தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Go down

 லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது  Empty லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Post  ishwarya Sat Feb 16, 2013 1:46 pm

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபப்பெருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான மகா தீபம் உற்சவம் இன்று நடந்தது. இதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மலை மீது மகா தீபம் ஏற்றிய போது, அண்ணாமலையார் கோயில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் எழுந்தருளி 3ம் பிரகாரத்தில் காட்சியளித்தார். அப்போது, கோயில் கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்ற்றப்பட்டது, இதனையடுத்து மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை பருவத ராஜகுல மரபினர் தலைச்சுமையாக கொண்டு சேர்த்தனர். ஏற்கனவே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலில் வைத்துள்ள தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஏற்றப்பட்டுள்ள மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும்.

தீபத் திருவிழாவுக்காக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 2 ரயில்களுக்கு சிறப்பு நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன் தலைமையில், 3 டிஐஜிக்கள், 12 எஸ்.பி., க்கள், 250 கமாண்டோ போலீசார் உள்பட சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை, தீபம் ஏற்றும் மலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிரிவலம் செல்ல உகந்த நேரம்

மகா தீபத்திருவிழாவான இன்று மாலை 6.26 மணி தொடங்கி, நாளை (28ம் தேதி) இரவு 8.29 மணி வரை கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
» மலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது ஏன்?
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum