தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர்

Go down

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர் Empty திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:39 pm

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு நேற்று பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள் நடந்து பூர்ணாகுதி நடந்தது. பின்னர் ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியங்கள், சந்தனம், தயிர், மாவுப்பொடி, பஞ்சாமிர்தம்,
தேன், விபூதி, பன்னீர், பால் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து யாகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட
புனிதநீரை கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரம், தங்க கவசம் மற்றும் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. ராகு பெயர்ந்த 10.53க்கு மகா தீபாராதனை, பஞ்ச தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதன் கோயிலில்
கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum