தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு

Go down

புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு Empty புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு

Post  ishwarya Sat Feb 16, 2013 1:18 pm

சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை, சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வடபழனி முருகன் கோயில். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில். தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பாரிமுனை கந்தசாமி கோயில், காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், காலடிப்பேட்டை பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.

திருவள்ளூர் வீரராகவர் கோயில், பூங்கா நகர் யோகஞான தட்சணாமூர்த்தி பீடத்தில் 108 லிட்டர் பால் அபிஷேகம், திருத்தணி முருகன் கோயில், சுருட்டப்பள்ளி கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், பொன்னேரி ஹரி கிருஷ்ணபெருமாள் கோயில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில், மீஞ்சூர் வெங்கடேச பெருமாள் கோயில், திருவுடையம்மன் கோயிலில் பூஜை நடக்கிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நள்ளிரவு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்களான சாந்தோம், பெசன்ட் நகர், அண்ணா நகர், பாரிமுனை புனித அந்தோணியார் ஆலயம், ராயபுரம் புனித மாதா தேவாலயம், தண்டையார்பேட்டை செயின் மேரிஸ் ஆலயம், மணலி குழந்தை ஏசு ஆலயம், திருவொற்றியூர் தூய சின்னப்பர் ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் தேவாலயம், திருவள்ளூர் புனித பிரான்சிஸ் சலேசியார் தேவாலயம், பழவேற்காடு மகிமை மாதா தேவாலயம், காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயம், செங்கல்பட்டு புனித சூசையப்பர் ஆலயம், அச்சிறுப்பாக்கம் மலைமழை மாதா கோயில், மாமல்லபுரம் திருக்குடும்ப தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவலாயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
»  பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
» பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
» மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு
»  மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum